Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிகட்டத்தில் கோல் போட்ட நார்த்ஈஸ்ட் யுனைடெட் வீரர் இட்ரிசா சில்லா... டிரா ஆன பரபரப்பு போட்டி

பனாஜி : கோவாவில் ஐஎஸ்எல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இதன் 7வது போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் மற்றும் கேரளா பிளாஸ்டர்கள் அணிகள் மோதின.

இதில் முதலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 கோல்கள் போட்டு முன்னிலை வகித்த நிலையில், போட்டியை நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி டிரா செய்துள்ளது.

இறுதி கட்டத்தில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் இட்ரிசா சில்லா போட்ட கோலால், போட்டி 2க்கு 2 என்ற கணக்கில் டிரா ஆனது.

7வது போட்டி

7வது போட்டி

கோவாவில் ஐஎஸ்எல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7வது போட்டி நேற்றைய தினம் நார்த்ஈஸ்ட் யுனைமெடட் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையில் பனாஜியில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டம் துவக்கத்தில் கேரளா அணியின் சார்பாக இருந்த நிலையில் பின்பு டிரா ஆனது.

5வது நிமிடத்தில் முதல் கோல்

5வது நிமிடத்தில் முதல் கோல்

போட்டியின் துவக்கத்திலேயே கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் செர்ஜியோ சிடோன்சா மற்றும் அவரை தொடர்ந்து கேரி ஹூப்பர் ஆகியோர் கோல் போட்டு அணியை முன்னணியில் வைத்தனர். முதல் ஐந்தாவது மற்றும் 45வது நிமிடங்கல் இவர்கள் தங்களது கோல்களை போட்டனர்.

டிரா ஆன போட்டி

டிரா ஆன போட்டி

இதையடுத்து நார்த்ஈஸ்ட் அணியின் கிவேசி அப்பியா ஒரு கோல் போட்டார். தொடர்ந்து அந்த அணியின் இட்ரிசா சில்லா இறுதி நேரத்தில் ஒரு கோல் போட்டு போட்டியை டிரா செய்ய உதவினார். முன்னதாக போட்டி துவங்குவதற்கு முன்னதாக மறைந்த கால்பந்தாட்ட வீரர் மரடோனாவின் மறைவிற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திலக் மைதானத்தில் நடைபெறுகிறது

திலக் மைதானத்தில் நடைபெறுகிறது

இந்நிலையில் இந்திய சூப்பர் லீக் தொடரின் 8வது போட்டி இன்று மாலை ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஏடிகே மோஹுன் பஹன் அணிகளுக்கிடையில் கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துவரும் இந்த தொடரின் போட்டிகள் சர்வதேச அளவில் 82 நாடுகளில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 27, 2020, 13:15 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+