For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எப்பதான் வெற்றி கிடைக்குமோ? ஆதங்கத்தில் ஒடிசா... நார்த்ஈஸ்ட் அணியுடனான போட்டி சமன்!

பேம்போலிம்: கோவாவின் பேம்போலிம்மில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் ஐஎஸ்எல்லின் 37வது போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.

ஒடிசா எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.

இரு அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு வெற்றிக்காக தீவிரமாக போராடிய நிலையில் போட்டி 2க்கு 2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

37வது போட்டி

37வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 37வது போட்டி நேற்றைய தினம் ஒடிசா எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் இருந்த ஒடிசா அணி வெற்றி பெறும் தீவிரத்துடன் விளையாடியது.

போட்டி டிரா

போட்டி டிரா

தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி பெற்று இறுதி இடத்தில் இருந்த ஒடிசா எப்சி அணி, 4வது இடத்தில் உள்ள கோவா அணியுடன் மோதிய இந்த போட்டியில் பல்வேறு பரபரப்புகளுக்கிடையில் இரு அணிகளும் தலா 2 கோல்களை போட்டு போட்டியை டிரா செய்தன.

ஒடிசா கோச் குற்றச்சாட்டு

ஒடிசா கோச் குற்றச்சாட்டு

இதையடுத்து பேசிய ஒடிசா கோச் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் அணியின் தோல்விக்கான வடிவமைப்பாளர்கள் என்று தங்களது அணிவீரர்களை குற்றம் சாட்டியுள்ளார். இந்த போட்டியில் டிபன்சிங்கில் அணி வீரர்கள் சொதப்பியதை அடுத்து அவர் இந்த விமர்சனத்தை செய்துள்ளார்.

சாதகமாக்கிய நார்த்ஈஸ்ட்

சாதகமாக்கிய நார்த்ஈஸ்ட்

இந்த டிபன்சிங் குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் பெஞ்சமின் லாம்பாட் மற்றும் கிவேசி அப்பையா ஆகியோர் அமைத்துக் கொண்டனர். இதையடுத்து நேரடி வெற்றியை பெறும் ஒடிசா அணியின் கனவு நிறைவேறாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஆயினும் இந்த டிரா மூலம் புள்ளிகள் பட்டியலில் ஓரிடம் முன்னேறி 10வது இடத்திற்கு சென்றுள்ளது ஒடிசா அணி.

டிரா செய்த நார்த்ஈஸ்ட்

டிரா செய்த நார்த்ஈஸ்ட்

போட்டியின் 23வது நிமிடத்தில் ஒடிசாவின் டியாகோ மார்சியோ அடித்த கோலையடுத்து அந்த அணி முன்னிலை வகித்தது. ஆனால் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள யுனைடெட் அணியின் பெடரிகோ கலீகோ பல்வேறு கோல் அடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்த நிலையில் அந்த அணி 2 கோல்களை அடித்தது. இதையடுத்து போட்டி டிரா ஆனது.

Story first published: Wednesday, December 23, 2020, 15:14 [IST]
Other articles published on Dec 23, 2020
English summary
Odisha hung on for only its second point of the season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+