உலக சாம்பியனுக்கு ஷாக் கொடுத்த செனகலுக்கு.. பொளேர் அடி தருமா போலந்து?

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எச் பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் கொலம்பியா, ஜப்பான் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் போலந்தும், செனகலும் சந்திக்கின்றன.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.
இந்த நிலையில், கடைசியாக உள்ள எச் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டத்தில் கொலம்பியாவும், ஜப்பானும் மோதுகின்றன. இரண்டாவது ஆடடத்தில் போலந்தும், செனகலும் சந்திக்கின்றன.
----
பிரிவு எச்
போலந்து - செனகல்
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
* இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.
* 8வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் போலந்து, 1986ல் கடைசியாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
* 2002ல் ஒரு வெற்றி, 2 டிரா என செனகல் அணி பிரிவு சுற்றில் தோல்வி அடையவில்லை.
* 2002 பிரிவு சுற்று ஆட்டத்தில் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை 1-0 என செனகல் வென்று அதிர்ச்சி அளித்தது.
------
முக்கிய வீரர்கள்
போலந்து - ஐரோப்பிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் 16 கோல்களை அடித்து அசத்தியவர் கேப்டன் ராபர்ட் லெவான்டோஸ்கி.
செனகல் - சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்பூல் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார் சாடியோ மானே. அவருடைய வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்பது சற்று கடினமே.
---
கடைசியாக 2002ல் உலகக் கோப்பையில் விளையாடிய செனகல் அப்போது காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. ஆனால், தொடர்ந்து மூன்று உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதிப் பெறவில்லை.
அணியில் குறிப்பிடும்படியான முன்கள மற்றும் பின்கள மற்றும் தடுப்பாட்டக்காரர்கள் உள்ளனர். இருந்தாலும், லிவர்பூல் அணிக்காக விளையாடியுள்ள சாடியோ மானேவை நம்பியே செனகல் அணி உள்ளது.
கடைசியாக 2006ல் நடந்த உலகக் கோப்பையில் விளையாடி பிரிவு சுற்றுலேயே வெளியேறியது போலந்து. இதுவரை ஒருமுறை கூட பைனல் போகாத போலந்து எப்படி தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளது என்ற சந்தேகம் பலரும் எழலாம்.
பிபாவின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை போலந்து சரியாக பயன்படுத்திக் கொண்டது. 2016 முதல் எந்த நாட்டுடனும் நட்பு போட்டிகளில் அது பங்கேற்கவில்லை. அதனால், உலகக் கோப்பைக்கான அணிகள் தரவரிசையின்போது அது 6வது இடத்தில் இருந்தது.
மிகவும் சுலபமான பிரிவில் அது இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் கொலம்பியா மற்றும் செனகலும் அதற்கு சவாலாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications