Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயிலை விட்டு வெளியே வந்தார் ரொனால்டின்ஹோ.. ஆனால் ஹவுஸ் அரெஸ்ட்டில் வச்சுட்டாங்களே!

அசன்சியான்: பராகுவே நாட்டில் கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோ, தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரேசில் கால்பந்து அணியின் பார்வர்ட் வீரரான ரொனால்டின்ஹோ, போலி பாஸ்போர்ட் மூலமாக பராகுவே நாட்டுக்குள் வந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

அவரை சிறையிலும் அடைத்தனர். இதனால் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை விடுதலை செய்ய கோரிக்கைகளும் எழுந்தன.

ரொனால்டின்ஹோ விடுதலை

ரொனால்டின்ஹோ விடுதலை

இந்த நிலையில் தற்போது அவரை சிறையிலிருந்து விடுவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் உடனடியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த மார்ச் 6ம் தேதி ரொனால்டின்ஹோவும், அவரது சகோதரரும் சேர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் ஜாமீன் கோரியிருந்தனர். அந்தக் கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது.

வீட்டுக் காவலில் அடைப்பு

வீட்டுக் காவலில் அடைப்பு

தற்போது விசாரணை முடியும் வரை அசன்சியான் நகரில் உள்ள ஒரு 4 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ரொனால்டின்ஹோவும், அவரது தம்பி ராபர்ட்டோ அஸிஸும் மறுத்துள்ளனர்.

போன இடத்தில் கைது

போன இடத்தில் கைது

பராகுவே நாட்டில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், வறுமைக் கோட்டில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ரொனால்டின்ஹோ அங்கு சென்றிருந்தார். ஆனால் அவரது பாஸ்போர்ட்டில் பல குளறுபடிகள் இருந்ததால் போலி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2002 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஆடியவர் ரொனால்டின்ஹோ. 2015ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

நட்சத்திர வீரர்

நட்சத்திர வீரர்

2002 உலகக் கோப்பையை பிரேசில் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் ரொனால்டின்ஹோ. மேலும் 2005 மற்றும் 2006 ஆகிய இரு ஆண்டுகளும் அவர் உலக அளவில் சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ரொனால்டின்ஹோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Story first published: Thursday, April 9, 2020, 10:29 [IST]
Other articles published on Apr 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+