மீண்டும் முதலிடத்தில் 'பச்சக்' என்று ஒட்டிக் கொண்ட ஏடிகே மோஹுன் பகன்... ராய் கிருஷ்ணா அதிரடி கோல்!
படோர்டா : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் நேற்றைய ஒடிசா எப்சி மற்றும் ஏடிகே மோஹுன் பகன் அணிகளுக்கிடையிலான போட்டியில் இறுதி நேர கோலால் மோஹுன் பகன் அணி வெற்றி கொண்டுள்ளது.
இதன்மூலம் 1க்கு 0 என்ற கணக்கில் ஒடிசா எப்சி அணியை வெற்றி கொண்டுள்ள மோஹுன் பகன் அணி மீண்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஏடிகே மோஹுன் பகன் அணியின் ராய் கிருஷ்ணா அடித்த இறுதிநேர பரபரப்பான கோலால் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

படோர்டா மைதானத்தில் போட்டி
ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 15வது போட்டி நேற்றைய தினம் கோவாவின் படோர்டா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தன்னுடைய 50வது போட்டியில் விளையாடிய மோஹுன் பகனின் வீரர் மன்வீர் சிங் மற்றும் ஒடிசா அணியின் டீகோ மாரீசியோ போட்டியை துவக்கினர்.

தவற விட்ட அணிகள்
இரு அணிகளும் போட்டியின் இடையில் கோல் போட கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த தவறிய நிலையில் கோல் இல்லாமல் போட்டி டிரா ஆகும் என்று கருதப்பட்டது. ஆயினும் இறுதி நேரத்தில் ராய் கிருஷ்ணா போட்ட கோலால் மோஹுன் பகன் அணி 1க்கு 0 என்ற கணக்கில் ஒடிசா அணியை வெற்றி கொண்டது.

தடுத்து ஆடிய ஒடிசா எப்சி
இதையடுத்து ஒடிசா அணியின் வெற்றிக்கணக்கு பொய்த்தது. ஆரம்பத்தில் ஏடிகே மோஹுன் பகன் அணி எதிரணியை பல்வேறு விதங்களில் வெற்றி கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதேபோல பிரேக்கிற்கு பின்பு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த ஒடிசா அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இறுதி நேர கோல்
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மற்ற அணியை அச்சுறுத்தும் வகையில் போட்டியை கொண்டு சென்றன. இதையடுத்து போட்டி டிரா ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிகட்டத்தில் ராய் கிருஷ்ணா அடித்த கோலால் மோஹுன் பகன் அணி 1க்கு 0 என்ற கணக்கில் ஒடிசாவை வெற்றி கொண்டு புள்ளிகள் பட்டியலில் மீண்டும் 1வது இடத்தில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications