Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராய் கிருஷ்ணா அதிரடி... மீண்டும் 2வது இடத்திற்கு தாவிய ஏடிகே மோஹுன் பகன்.. சிறப்பான சம்பவம்

கோவா : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 30வது போட்டி நேற்றைய தினம் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் கோவா எப்சி அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோஹுன் பகன் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

மோஹுன் பகன் அணியின் முக்கிய வீரர் ராய் கிருஷ்ணாவின் பெனால்டி அந்த அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தது.

சிறப்பான 30வது போட்டி

சிறப்பான 30வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடர் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய 30வது போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் எப்சி கோவா அணிகள் மோதின. படோர்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு சிறப்பான தருணங்களை தந்தது.

மோஹுன் பகன் வெற்றி

மோஹுன் பகன் வெற்றி

இந்தப் போட்டியில் ராய் கிருஷ்ணாவின் பெனால்டி ஏடிகே மோஹுன் பகன் அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இதையடுத்து அந்த அணி 1க்கு 0 என்ற கணக்கில் எப்சி கோவா அணியை வெற்றி கொண்டு ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளது. இந்த தொடரில் ராய் கிருஷ்ணாவின் 5வது கோல் இது.

மோஹுன் பகன் அதிரடி

மோஹுன் பகன் அதிரடி

நேற்றைய போட்டியில் கோச் ஆன்டோனியோ அப்பாஸ் தலைமையிலான ஏடிகே மோஹுன் பகன் அணி துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய நிலையில் முதல் பகுதியில் அவர்களை தடுத்து விளையாடிய கோவா அணி, கோல் அடிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் தவற விட்டது.

வீணான முயற்சி

வீணான முயற்சி

இரண்டாவது பகுதியில் தீவிரதத்துடன் களமிறங்கிய கோவா அணி வீரர்கள், கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கினர். ஆயினும் அவர்களது முயற்சிகளை எதிரணியினர் தடுத்து விளையாடினர். இதேபோல அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை மோஹுன் பகன் அணியும் தவற விட்டது.

Story first published: Thursday, December 17, 2020, 15:33 [IST]
Other articles published on Dec 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+