Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சலாவின் எகிப்தை காலி செய்தது.... இரண்டாவது சுற்றுக்கு பெர்த் போட்டது ரஷ்யா!

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று துவங்கியது. இதில் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா, முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த எகிப்தை சந்தித்தது. பிரபல வீரர் சலாவின் எகிப்தை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறுவதற்கான பெர்த்தை புக் செய்தது ரஷ்யா.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

russia beats egypt in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வென்ற ரஷ்யா, இரண்டாவது ஆட்டத்திலும் வென்று அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்து கொண்டது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நட்சத்திர வீரர் மொகம்மது சாலாஹின் எகிப்து இந்த ஆட்டத்திலும் தோல்வி அடைந்தது.

russia beats egypt in the fifa world cup

----
பிரிவு ஏ
ரஷ்யா - எகிப்து
3 - 1
----
ஏ பிரிவில் இதுவரை...

* ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது
* உருகுவே 1-0 என்று எகிப்தை வென்றது
* ரஷ்யா 3-1 என எகிப்தை வென்றது.
ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் ரஷ்யா இரண்டு வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உருகுவே 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எகிப்து மற்றும் சவுதி அரேபியா புள்ளிகள் ஏதும் பெறவில்லை.
-----
ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டமே அசத்தலாக அமைந்தது. சவுதி அரேபியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும் ரஷ்ய வீரர்கள் அசத்தலாக விளையாடினர். 12வது நிமிடத்தில் காசின்கீ இந்த உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார்.

43வது நிமிடத்தில் செர்ரிஷேவ் கோலடிக்க முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரஷ்யா இருந்தது. அதன்பிறகு டிசூபா 71வது நிமிடத்திலும், ஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடம் இருக்கையில் செர்ரிஷேவ் மற்றொரு கோலை அடித்தனர். சில விநாடிகளே இருந்த நிலையில் கோலோவின் அணியின் 5வது கோலை அடித்தார்.

1934க்குப் பிறகு 1990ல் நடந்த உலகக் கோப்பையில் எகிப்து பங்கேற்றது. ஆனால், பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது மொகமது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது.

முதல் ஆட்டத்தில் உருகுவேவை சந்தித்தது எகிப்து. இரு அணிகளும் துவக்கம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே பந்து இருந்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 91வது நிமிடத்தில் உருகுவேயின் ஜோஸ் ஜிமனெஸ் அபாரமாக கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

ஏற்கனவே ஒரு வெற்றியைப் பெற்று ரஷ்யா எகிப்துடன் இன்று விளையாடியது. இதில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மொகம்மது சாலாஹ் களமிறங்கினார்.

இந்த ஆட்டத்தில் ரஷ்யா மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்தது. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் அஹ்மது பாதி, 59வது நிமிடத்தில் செர்ரிஷேவ், 62வது நிமிடத்தில் டிசூபா கோலடிக்க 3-0 என ரஷ்யா முன்னிலை பெற்றது.

நட்சத்திர வீரர் சலா பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 73வது நிமிடத்தில் எகிப்துக்காக ஒரு கோலடித்தார். சமபலத்துடன் இந்த ஆட்டம் நடந்ததே, எகிப்து அணிக்கு மிகப் பெரிய தோல்வியாகும். ரஷ்யாவின் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் எகிப்து திணறியது.

இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ரஷ்யா பெற்றது. புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தச் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை ரஷ்யா பிரகாசமாக்கி கொண்டுள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள எகிப்து பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலையில் உள்ளது.

Story first published: Wednesday, June 20, 2018, 11:22 [IST]
Other articles published on Jun 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+