Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஷ்யாவை தடுத்து நிறுத்துமா சாலாஹின் எகிப்து.. இன்று அனல் பறக்கும் ஆட்டம்!

russia to meet egypt in the fifa world cup

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று துவங்குகிறது. இதில் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா, முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த எகிப்தை சந்திக்கிறது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. எச் பிரிவில் உள்ள அணிகள் மட்டும் இன்று விளையாடுகின்றன. ஏ பிரிவில் ஏற்கனவே முதல் ஆட்டத்தை விளையாடியுள்ள ரஷ்யாவும், எகிப்தும் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் விளையாடுகின்றன.
----
பிரிவு ஏ
ரஷ்யா - எகிப்து
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி
----
ஏ பிரிவில் இதுவரை...

* ரஷ்யா 5-0 என சவுதி அரேபியாவை வென்றது
* உருகுவே 1-0 என்று எகிப்தை வென்றது

russia to meet egypt in the fifa world cup

ஏ பிரிவின் புள்ளிப் பட்டியலில் ரஷ்யா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. உருகுவே 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எகிப்து மற்றும் சவுதி அரேபியா புள்ளிகள் ஏதும் பெறவில்லை.
-----
ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டமே அசத்தலாக அமைந்தது. சவுதி அரேபியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்து முடியும் ரஷ்ய வீரர்கள் அசத்தலாக விளையாடினர். 12வது நிமிடத்தில் காசின்கீ இந்த உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார்.

43வது நிமிடத்தில் செர்ரிஷேவ் கோலடிக்க முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையில் ரஷ்யா இருந்தது. அதன்பிறகு டிசூபா 71வது நிமிடத்திலும், ஆட்டம் முடிவதற்கு கடைசி நிமிடம் இருக்கையில் செர்ரிஷேவ் மற்றொரு கோலை அடித்தனர். சில விநாடிகளே இருந்த நிலையில் கோலோவின் அணியின் 5வது கோலை அடித்தார்.

1934க்குப் பிறகு 1990ல் நடந்த உலகக் கோப்பையில் எகிப்து பங்கேற்றது. ஆனால், பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது மொகமது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது.

முதல் ஆட்டத்தில் உருகுவேவை சந்தித்தது எகிப்து. இரு அணிகளும் துவக்கம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே பந்து இருந்தது. இரு அணிகளுக்கும் தலா மூன்று முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 91வது நிமிடத்தில் உருகுவேயின் ஜோஸ் ஜிமனெஸ் அபாரமாக கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்த எகிப்தின் நட்சத்திர வீரரான மொகம்மது சாலாஹ் அந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் விளையாடவில்லை. அதனால், இன்று நடக்கும் ஆட்டத்தில் சாலாஹ் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஏற்கனவே ஒரு வெற்றியைப் பெற்று ரஷ்யா தெம்புடன் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து மீண்டு, கோலடிக்கும் வாய்ப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் எகிப்து உள்ளது. அடுத்து நடக்கும் உருகுவேவுக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவாலாக இருக்கும் என்பதால், இதில் வெற்றி பெற வேண்டும் அல்லது தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது.

Story first published: Tuesday, June 19, 2018, 9:38 [IST]
Other articles published on Jun 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+