Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலிமையான புதிய அணி. 5வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி அணிகள் மோதல். காத்திருக்கும் கலக்கல் விருந்து!

பேம்போலிம், கோவா : பரபரப்பான ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 13வது போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் இன்று மோதவுள்ளன.

கோவாவின் பேம்போலினில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பெற எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி முனைப்புடன் காணப்படுகிறது.

தன்னுடைய முதல் போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் அணியுடன் மோதிய எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

இன்று 13வது போட்டி

இன்று 13வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 13வது போட்டி இன்றைய தினம் கோவாவின் பேம்போலினில் உள்ள ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி 3 புள்ளிகளுடன் 5வது இடத்தில் வலிமையாக உள்ள மும்பை சிட்டி எப்சி அணியுடன் மோதவுள்ளது.

2க்கு 0 கோல் கணக்கில் தோல்வி

2க்கு 0 கோல் கணக்கில் தோல்வி

தன்னுடைய முதல் போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் அணியுடன் மோதிய எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போதைய மும்பை சிட்டி அணிக்கு எதிரான இன்றைய போட்டி அந்த அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

முதல் போட்டியில் தோல்வி

முதல் போட்டியில் தோல்வி

இந்திய சூப்பர் லீக் 2020-21 தொடரில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் அந்த அணி உள் நுழைந்துள்ளது. அதனால் சரியான அணியை உருவாக்குவதிலேயே காலம் சரியாக இருந்ததால் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ள நேரம் கிடைக்கவில்லை என்றும் அதனால் முதல் போட்டியில் தோல்வியடைந்ததாக அந்த அணியின் கோச் ராபி பௌலர் தெரிவித்துள்ளார்.

பௌலர் நம்பிக்கை

பௌலர் நம்பிக்கை

ஆயினும் தன்னுடைய அணி தொடர் வெற்றிகளை பெற்று 11 அணிகளை கொண்ட புள்ளிகள் பட்டியலில் முன்னேறும் என்றும் பௌலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் தன்னுடைய அணி தோல்வியை அடைந்தாலும், சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அனுபவமிக்க வீரர்கள்

அனுபவமிக்க வீரர்கள்

இதனிடையே எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி இந்த தொடரில் புதிதாக களமிறங்கினாலும், அதில் அனுபவமிக்க வீரர்கள் உள்ளதாக மும்பை எப்சி அணியின் கோச் லோபெரா தெரிவித்துள்ளார். அதனால் இந்தப் போட்டியில் வெற்றி கொள்ள கடுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 1, 2020, 13:22 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+