For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவாவுடனான போட்டியை டிரா செய்த ஈஸ்ட் பெங்கால்... ஆனாலும் 9வது இடம்தான்!

வாஸ்கோ :ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 49வது போட்டி நேற்றைய தினம் வாஸ்கோவின் திலக் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் எப்சி கோவா அணிகள் மோதின. இதில் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் போட்டியை டிரா செய்துள்ளன.

இதனிடையே, நேற்றைய போட்டியில் கோல் அடித்த ஈஸ்ட் பெங்கால் அணி வீரர் பிரைட் எனோபேக்ரேவிற்கு அந்த அணியின் கோச் ராபி பௌலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

49வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் நேற்றைய 49வது போட்டி வாஸ்கோவின் திலக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் எப்சி கோவா அணிகள் மோதின. இரு அணிகளும் தங்களது வெற்றிக்காக முனைப்புடன் விளையாடிய நிலையில், தலா ஒரு கோல் போட்டு போட்டியை டிரா செய்துள்ளன.

ஈஸ்ட் பெங்கால் அணி கோல்

ஈஸ்ட் பெங்கால் அணி கோல்

போட்டியின் முதல் பாதியில் கோவா அணி ஆதிக்கம் செலுத்தியது. கோல் அடிக்க அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் ஈஸ்ட் பெங்கால் அணியின் பிரைட் எனோபேக்ரே 79வது நிமிடத்தில் அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கோவாவின் தேவேந்திர முர்கோன்கர் உடடினயாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

தவறவிட்ட கோவா அணி

தவறவிட்ட கோவா அணி

போட்டி துவங்கி 4வது நிமிடத்திலேயே கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை கோவா அணி தவறவிட்டது. ஆயினும் சிறப்பான தடுப்பாட்டத்தை மேற்கொண்ட அந்த அணியின் வீரர்கள், போட்டியின் இறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

ராபி பௌலர் பாராட்டு

ராபி பௌலர் பாராட்டு

இந்நிலையில் தனது முதல் கோலை அடித்துள்ள எனோபேக்ரேவிற்கு ஈஸ்ட் பெங்கால் அணியின் கோச் ராபி பௌலர் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியை தான் மிகவும் ரசித்து பார்த்ததாகவும் எனோபேக்ரே மிகவும் திறமையான வீரர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

Story first published: Thursday, January 7, 2021, 16:40 [IST]
Other articles published on Jan 7, 2021
English summary
I enjoy watching him play and he brings a lot to the team -Fowler
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+