Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க உலக சாம்பியனுக்கே அதிர்ச்சி கொடுத்தவங்க.... போலந்துக்கு ஆட்டம் காட்டிய செனகல்!

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எச் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என ஜப்பான் வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் செனகல் 2-1 என போலந்தை வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

Poland

இந்த நிலையில், கடைசியாக உள்ள எச் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் முதல் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என ஜப்பான் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் செனகல் 2-1 என போலந்தை வென்றது.
----
பிரிவு எச்
செனகல் - போலந்து
2 - 1
----
* இரு அணிகளும் முதல் முறையாக மோதின.
* 8வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் போலந்து, 1986ல் கடைசியாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
* 2002ல் ஒரு வெற்றி, 2 டிரா என செனகல் அணி பிரிவு சுற்றில் தோல்வி அடையவில்லை.
* 2002 பிரிவு சுற்று ஆட்டத்தில் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை 1-0 என செனகல் வென்று அதிர்ச்சி அளித்தது.
------
கடைசியாக 2002ல் உலகக் கோப்பையில் விளையாடிய செனகல் அப்போது காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது. ஆனால், தொடர்ந்து மூன்று உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதிப் பெறவில்லை. கடைசியாக 2006ல் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய போலந்து, பிரிவு சுற்றிலேயே வெளியேறியது.

இந்த உலகக் கோப்பையில் அனைத்து பிரிவுகளில் தலா 2 ஆட்டங்கள் முடிந்த நிலையில், எச் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்று அசத்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் போலந்துடன் செனகல் மோதியது. இந்த ஆட்டத்தில் 61 சதவீத நேரம் பந்து போலந்து அணியிடமே இருந்தது. அந்த அணிக்கு 11 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 4 கோல் பகுதிக்குள் சென்றது.

ஆனால், செனகல் அந்த கோல் வாய்ப்புகளை அபாரமாக தடுத்து நிறுத்தியது. குறைந்த நேரமே பந்தை தங்களிடம் இருந்தாலும், அதில் பல கோலடிக்கும் வாய்ப்புகளை செனகல் உருவாக்கி கொண்டது.

ஆட்டத்தில் 37வது நிமிடத்தில் போலந்தின் சியோனெக் சேம் சைடு கோலடிக்க செனகல் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் நியாங்க் கோலடிக்க செனகல் 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவதற்கு சற்று முன், 86 நிமிடத்தில் போலந்தின் கிர்சோவியாக் கோலடிக்க, 2-1 என முன்னிலையை போலந்து குறைத்தது.

நாங்க, 2002ல் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தவங்க என்று இந்த ஆட்டத்தில் செனகல் அபாரமாக விளையாடி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Story first published: Wednesday, June 20, 2018, 9:14 [IST]
Other articles published on Jun 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+