Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை.... நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு ஷாக்.... 1-0 என மெக்சிகோ வென்றது!

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மெக்சிகோ அதிர்ச்சி அளித்தது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Shock for Germany from mexico in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு மெக்சிகோ அதிர்ச்சி தோல்வியை அளித்தது.
----
பிரிவு எப்
மெக்சிகோ - ஜெர்மனி
1 - 0
----
இதுவரை உலகக் கோப்பையில் இரு அணிகளும் நான்கு முறை மோதின. அதில் ஜெர்மனி தோல்வி அடைந்ததில்லை. மூன்றில் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது.

கடந்த 7 உலகக் கோப்பைகளில் தனது அனைத்து முதல் ஆட்டங்களிலும் ஜெர்மனி வென்றுள்ளது. மெக்சிகோ கடந்த 5 உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததில்லை. 4ல் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது.

இதுவரை பிரேசில் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்வதுடன் பிரேசில் சாதனையை சமன் செய்யும் இலக்குடன் ஜெர்மனி களமிறங்கியுள்ளது.

உலகக் கோப்பையில் 14 அல்லது அதற்கு மேற்பட்ட முறை விளையாடியுள்ள 8 அணிகளில், கோப்பையை வெல்லாத ஒரே அணி மெக்சிகோ.

இன்று நடந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி மிகவும் சிறப்பாகவே விளையாடியது. கிட்டத்தட்ட 67 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. 26 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் 9 முறை கோல் பகுதிக்கு பந்தை செலுத்தியது. 8 முறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், கோலடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி தவற விட்டது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் மெக்சிகோவின் லோசானோ ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார். தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்துடன் களமிறங்கிய மெக்சிகோ அதன் பிறகு தெம்புடன் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டது.

நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று எப் பிரிவில் மெக்சிகோ 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Story first published: Sunday, June 17, 2018, 22:34 [IST]
Other articles published on Jun 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+