For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் தோல்வி... இது ஆறாவது முறை!

ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி தோல்வி அடைந்தது. முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் தோல்வி அடைவது இது 6வது முறையாகும்.

மாஸ்கோ: இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி மேஜிக் பலிக்காத அதிர்ச்சிக்கு அடுத்ததாக, நடப்பு சாம்பியனான ஜெர்மனி தனது முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கிறது. போட்டியின் நான்காவது நாளான இன்று எப் பிரிவில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியும், மெக்சிகோவும் மோதின.

shocking defeat for defending champion in fifa world cup

இந்த ஆட்டத்தில் துவக்கம் முதல் கடைசி விசில் அடிக்கும் வரை, ஜெர்மனி மிகச் சிறப்பாகவே விளையாடியது. இந்த உலகக் கோப்பையிலே மிகவும் அதிக அளவாக கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனிக்கு 26 முறையும், மெக்சிகோவுக்கு 13 முறையும் இந்த வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் பகுதிக்கு ஜெர்மனி 9 முறையும், மெக்சிகோ 4 முறையும் பந்தை அனுப்பின.

ஆனால், மெக்சிகோவின் மிகவும் வலிமையான தடுப்பாட்டத்தின் முன் ஜெர்மனியால் கோல் அடிக்கவே முடியவில்லை. இறுதியில் 1-0 என ஜெர்மனிக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது மெக்சிகோ.

கடந்த நான்கு உலகக் கோப்பைகளில் முதல் ஆட்டத்திலேயே தோல்வி அடையும் மூன்றாவது நடப்பு சாம்பியன் ஜெர்மனி. உலகக் கோப்பை போட்டிகளில் இது ஆறாவது முறையாகும்.

1950ல் நடப்பு சாம்பியன் இத்தாலி, ஸ்வீடனிடம் 3-2 என தோல்வி அடைந்தது.
1982ல் அர்ஜென்டீனாவை 1-0 என பெல்ஜியம் வென்றது
1990ல் அர்ஜென்டீனாவுக்கு கேமரூன் அதிர்ச்சி கொடுத்தது. 1-0 என அது வென்றது.
2002ல் செனகலிடம் 1-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் தோல்வி அடைந்தது.
2014ல் நடப்பு சாம்பியனாக இருந்த ஸ்பெயினை 5-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.
தற்போது நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 1-0 என மெக்சிகோ வென்றது.

ஏற்கனவே ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் கோல் ஏதும் அடிக்காமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

Story first published: Sunday, June 17, 2018, 23:11 [IST]
Other articles published on Jun 17, 2018
English summary
Defending champion germany lost in the opening match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+