யூரோ 2008 கால்பந்து: அரை இறுதியில் துருக்கி-ஜெர்மனியுடன் மோதும்

கடைசிவரை பரபரப்பும் விறுவிறுப்புமாக நடந்த இந்தப் போட்டியில் பெனால்டி முறையில் எக்ஸ்ட்ரா டைம் கோலடித்து இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தார் துருக்கியின் செமி சென்ட்ரக்.
மற்ற இரு கோல்களை அர்டா டாருன், ஹாமித் அல்டின்டாப் ஆகியோர் அடித்தனர். குரேஷியாவின் சார்பில் இவான் க்ளாஸ்னிக் ஒரு கோலடித்தார்.
துருக்கி கோல்கீப்பர் செய்த ஒரு மிகப்பெரிய தவறு காரணமாக கிட்டத்தட்ட வெற்றி குரோஷியாவுக்குத்தான் என்று முடிவாகிவிட்ட நிலையில், ப்ரீ கிக் வாய்ப்பில் அதை துருக்கிக்கு சாதகமாக மாற்றியவர் செமி.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல்லைப் போராடி வென்றது ஜெர்மனி.
முதல் அரை இறுதிப் போட்டி வரும் புதன் கிழமை பாசெல் நகரில் நடக்கிறது. ஜெர்மனி - துருக்கி அணிகள் இதில் மோதுகின்றன.
இதற்கிடையே இன்று நள்ளிரவு 12.15க்கு ரஷ்யா-நெதர்லாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது காலிறுதி ஆட்டம் பாசெல் நகரில் நடைபெறுகிறது. வியன்னாவில் நாளை நடைபெறும் நான்காவது காலிறுதியில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
இறுதிப் போட்டி வியன்னாவில் ஜூன் 29-ம் தேதி நடக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:18 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications