For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓராண்டில் 86 கோல்கள்: புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி

By Mathi
Lionel Messi
மேட்ரிட்: ஓராண்டில் 86 கோல்களை அடித்து அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.

1972ஆம் ஆண்டில் ஜெர்மனி வீரர் முல்லர் அடித்த 85 கோல்களே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது மெஸ்ஸி 40 ஆண்டுகால சாதனையை முறியடித்திருக்கிறார்.

லா லிகா கால்பந்து தொடரில் ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் பெடிஸ் கிளப் அணிக்கு எதிராக பார்சிலோனா கிளப்பில் பங்கேற்று ஆடிய மெஸ்ஸி 2 கோல்களை அடித்ததன் மூலம் இந்த உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.

அர்ஜெண்டினா மற்றும் பார்சிலோனா கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார் 25 வயது மெஸ்ஸி. அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி. அர்ஜெண்டினா அணிக்காக 12 கோல்களையும், பார்சிலோனா அணிக்கு 74 கோல்களையும் அடித்திருக்கிறார் மெஸ்ஸி.

தமது சாதனை குறித்து மெஸ்ஸி கூறுகையில், சாதனையை முறியடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் அணியின் வெற்றி முக்கியமானது. சாதனையை விட லா லிகா, ஸ்பெயின் லீக், சாம்பியன் லீக், ஐரோப்பிய மற்றும் உலகக் கோப்பை போட்டிகள் மிக முக்கியமானது என்றார் அவர்.

Story first published: Tuesday, December 11, 2012, 11:03 [IST]
Other articles published on Dec 11, 2012
English summary
Lionel Messi, considered the world’s best footballer, has made another landmark achievement: He scored his 86th goal in a calendar year, beating the seemingly unreachable record set by German legend Gerd Muller.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+