பார்சிலோனாவுக்காக 300வது கோலை அடித்தார் மெஸ்ஸி

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. முன்னாள் ஜாம்பவான் மாரடோனாவின் வாரிசாக கருதப்படுபவர். மாரடோனாவுக்கும் செல்லப் பிள்ளதான் மெஸ்ஸி.
மெஸ்ஸி, ஸ்பெயின் லீக் போட்டிகளில், பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார். பல வருடமாக இந்த அணிக்காக ஆடி வரும் மெஸ்ஸி, தற்போது பார்சிலோனா அணிக்காக தனது 300வது கோலைப் போட்டு சாதனை படைத்துள்ளார்.
கிரெனடா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் மெஸ்ஸி போட்ட ஒரு கோலும் அடக்கம்.
பார்சிலோனா அணிக்காக இதுவரை 365 போட்டிகளில் ஆடி 301 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, February 17, 2013, 13:08 [IST]
Other articles published on Feb 17, 2013


Click it and Unblock the Notifications