Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யூரோ 2008 இறுதி: ஜெர்மனியை வீழ்த்துமா ஸ்பெயின்?

வியன்னா: ஐரோப்பிய கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாரம்பரிய எதிரி அணிகளான ஸ்பெயினும் ஜெர்மனியும் மோதுகின்றன.

நேற்று நடந்த அரை இறுதியில் வலிமை மிக்க ரஷ்யாவை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது ஸ்பெயின்.

ஸேவி ஹெர்னான்டஸ், டானி கைஸ் மற்றும் டேவிட் ஸில்வா ஆகியோர் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தலா ஒரு கோலடித்து ஸ்பெயின் அணியை இரண்டாம் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைய உதவினர்.

இதற்கு முன் 1964ம் ஆண்டு நடந்த யூரோ கோப்பையை வென்ற அணி ஸ்பெயின். அதன் பிறகு நடந்த பல போட்டிகளில் காலிறுதி, அரையிறுதிகளில் வெளியேறி அவமானப்பட்டது. குறிப்பாக ஜெர்மனியிடம் பலமுறை தோல்வியைப் பரிசாகப் பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வியன்னாவில் நடக்கும் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் முக்கிய வீரரான டேவிட் வில்லா பங்கேற்க மாட்டார். அதே போல அந்த அணியன் கோச் லூயிஸ் அரகன்ஸூம் இந்தப் போட்டியில் இருக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோச் மற்றும் நட்சத்திர வீரர் இல்லாமல் வலிமையான ஜெர்மனியை வென்று யூரோ கோப்பையைக் கைப்பற்றுமா ஸ்பெயின்? பார்க்கலாம்!

Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+