Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேடையில் திடீரென கண்கலங்கிய மெஸ்ஸி.. பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்றார்.. சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை: பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.

Recommended Video

Lionel Messi Crying in his Last Barcelona Press Conference | FCB | Oneindia Tamil

கால்பந்து உலகில் பல கோடி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளவர் லியோனல் மெஸ்ஸி, இவர் பார்சிலோனா அணி வீரராக பல்வேறு சாதனைகளை படைத்தவர்.

இந்நிலையில் தற்போது லியோனல் மெஸ்ஸி தான் நீண்ட வருடங்களாக விளையாடி வந்த பார்சிலோனா அணியை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.

மெஸ்ஸி விலகல்

மெஸ்ஸி விலகல்

அர்ஜெண்டினாவின் (Argentina) நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பார்சலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்தார். அந்த கால்பந்து அணியுடன் மெஸ்ஸி போட்டிருந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யானது.

என்ன காரணம்

என்ன காரணம்

பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை. அவர் இனி பார்சிலோனா அணிகாக விளையாட்டமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனா மற்றும் மெஸ்ஸி இடையே நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனக்கூறப்படுகிறது.

வழியனுப்பும் நிகழ்ச்சி

வழியனுப்பும் நிகழ்ச்சி

இந்நிலையில் இன்று மெஸ்ஸியை வழியனுப்பி வைப்பதற்கான ஃபேரவல் நிகழ்ச்சிக்கு பார்சிலோனா அணி ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்காக வந்த லியோனல் மெஸ்ஸி திடீரென அழத்தொடங்கினார். நீண்ட வருடங்களாக விளையாடி வந்த அணியை விட்டு வெளியேறுவதை எண்ணி அவர் உனர்ச்சிப்பொங்க கண்ணீர் விட்டார். அவரின் நிலையை புரிந்துக்கொண்ட ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகமளித்தனர்.

கண் கலங்கிய மெஸ்ஸி

கண் கலங்கிய மெஸ்ஸி

பின்னர் பேசிய மெஸ்ஸி, என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு 'Gud Bye' சொல்வேன் என்று நினைத்துப்பார்கவே இல்லை.

தயாராக இல்லை

தயாராக இல்லை

நீண்ட வருடங்களாக இந்த அணிக்காக விளையாடியுள்ளேன். எனக்கு வாழ்கையை தந்தது இந்த அணி. ஆனால் தற்போது விடை பெறுவது மிக கடினமாக உள்ளது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை என கண்ணீருடன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசியது ரசிகர்களுக்கே வருத்தமாக இருந்தது.

21 ஆண்டுகால பயணம்

21 ஆண்டுகால பயணம்

கடந்த 2000 ஆம் ஆண்டு இளம் வீரராக பார்சிலோனா அணியில் இணைந்தவர் லியோனல் மெஸ்ஸி. அதாவது அவரின் 13 வயது முதல் அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

சாதனை

சாதனை

அக்குழுவுக்காக, ஆக அதிகமான போட்டிகளில் விளையாடி, ஆக அதிகமான கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமை மெஸ்ஸியை சார்ந்துள்ளது. இதுவரை பார்சிலோனாவுக்காக 778 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 672 கோல்களை அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்?

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், மெஸ்ஸி இன்னும் வேறு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது. எனவே தற்போதைக்கு அவர் எந்த அணியை சேர்ந்தவரும் இல்லை. விரைவில் அவரது புதிய ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 14, 2022, 16:34 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+