Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லா டீமும் ப்ளே-ஆப்பிற்காக முட்டி மோதிக்கிட்டு இருக்கு... பெங்களூரு எப்சி கோச் சொல்லியிருக்காரு!

கோவா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 74வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெவுள்ளது.

இந்த போட்டியில் ஐதராபாத் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் அனைத்து அணிகளும் ப்ளே ஆப்பிற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஐதராபாத் எப்சி அணியின் கோச் மானுவல் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

74வது போட்டி

74வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 74வது போட்டி கோவாவின் திலக் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் ஐதராபாத் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் முறையே 4வது மற்றும் 7வது இடங்களில் உள்ள நிலையில் இன்றைய போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிக்கு தீவிரம்

வெற்றிக்கு தீவிரம்

கடந்த 5 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 3 போட்டிகளை டிரா செய்துள்ள ஐதராபாத் அணி இந்த போட்டியிலும் தொடர்ந்து வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தற்போதைய சூழலில் அனைத்து அணிகளும் முதல் 4 இடத்தில் இடம்பெற்று ப்ளே ஆப்பிற்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறதாக அணியின் கோச் மானுவல் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

மானுவல் மார்கஸ் உறுதி

மானுவல் மார்கஸ் உறுதி

இதில் வெற்றிபெற அனைத்து அணிகளும் தகுதியுடன் உள்ளதாகவும் மானுவல் மார்கஸ் தெரிவித்துள்ளார். தங்களது ஸ்டைலில் அனைத்து போட்டிகளை எதிர்கொள்வதாகவும் தொடர்ந்து வலிமையான அணிகளுடன் மோதி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

நவ்சத் மூசா நம்பிக்கை

நவ்சத் மூசா நம்பிக்கை

கடந்த 7 போட்டிகளில் வெற்றியடையாத பெங்களூரு அணி முதல் 4 இடத்திற்கு முன்னேற 4 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுவதால் இன்றைய போட்டியில் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, ப்ளே -ஆப்பை தங்களது அணி விட்டுக் கொடுக்காது என்று பெங்களூரு எப்சி அணியின் தற்காலிக கோச் நவ்சத் மூசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 28, 2021, 19:13 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+