பெங்களூரு எப்சிக்கான ஒப்பந்தம்..... 2021 வரை நீட்டித்தார் சுனில் சேத்ரி!
பெங்களூரு:இந்திய கால்பந்து கிளப் அணியான பெங்களூரு எப்சியின் கேப்டன் சுனில் சேத்ரி, அந்த கிளப் உடனான தனது ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கிளப் அணியான பெங்களூரு எப்சிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் பெங்களூரு எப்சி கலந்து கொண்டபோது, 3 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்திருந்தார் சுனில் சேத்ரி.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, பெங்களூரு எப்சியின் அதிக கோல் அடித்த வீரராக அவர் உள்ளார். இதுவரை 144 ஆட்டங்களில் 71 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில், பெங்களூரு எப்சியின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளார் 33 வயதாகும் சுனில் சேத்ரி. பெங்களூரு எப்சி வீரர்கள் பெல்லாரியில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிறகு ஸ்பெயினில் பயிற்சி எடுக்க உள்ளனர்.
நடப்பு சீசனில் முதல் போட்டியாக, ஆகஸ்ட் மாதம் 22ல் துவங்கும் ஏ.எப்.சி., கோப்பை போட்டியில் பெங்களூரு எப்சி பங்கேற்கிறது.


Click it and Unblock the Notifications