கால்பந்தின் கேப்டன் கூல் சேத்ரி... 100வது போட்டியில் விளையாடுகிறார்... உருக்கமான வேண்டுகோள்!
Recommended Video

மும்பை: எந்த நிலையிலும் மன உணர்வுகளை மைதானத்தில் வெளிப்படுத்தாமல் விளையாடுவதில், கிரிக்கெட்டில் கேப்டன் கூல் தோனி எப்படியோ அப்படிபட்டவர்தான் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. தனது 100வது போட்டியில் பங்கேற்கும் அவர், கால்பந்து போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் கென்யா 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வென்றது. மும்பையில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் கென்யாவுடன் இந்தியா மோத உள்ளது.

அதிக கோல்கள்
சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, தற்போது உலக அளவில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை சுனில் சேத்ரி பெற்றார்.

சதமடிக்கும் சேத்ரி
கென்யாவுக்கு எதிராக இன்று நடக்கும் ஆட்டம் சேத்ரிக்கு 100வது போட்டியாகும். இந்திய அளவில் 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது வீரராகிறார் சேத்ரி. பாய்சுங் பூட்டியா 104 போட்டிகளில் பங்கேற்று 40 கோல்களை அடித்துள்ளார்.

கேப்டன் கூல்
கிரிக்கெட்டின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி என்றால், கால்பந்தின் கேப்டன் கூல் சுனில் சேத்ரி. இதுவரை 99 ஆட்டங்களில் 59 கோல்களை அடித்துள்ளார். ஆனால், கோல்கள் அடிக்கும்போது பெரிய அளவில் அலட்டிக் கொள்ள மாட்டார், கொண்டாட மாட்டார்.
மேட்ச் பார்க்க வாங்க
மும்பையில் நடக்கும் போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு சுனில் சேத்ரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய 100வது போட்டிக்காக அவர் அழைக்கவில்லை. உலகத் தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்தியாவை முன்னேற்றுவதற்கு, வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக வரும்படி அவர் உருக்கமாக கேட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியும் இந்த கோரிக்கை முன்மொழிந்துள்ளார்.


Click it and Unblock the Notifications