For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவிட்சர்லாந்து 2-2 என கோஸ்டாரிகாவுடன் டிரா... நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் இ பிரிவில் நடக்கும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா சந்திக்கின்றன.

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த இ பிரிவு ஆட்டத்தில் கோஸ்டாரிகாவுடன் 2-2 என டிரா செய்து நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து முன்னேறியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகின்றன. இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரேசில், ர்பியாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா மோதின.

பிரேசிலுக்கு அதிர்ச்சி

பிரேசிலுக்கு அதிர்ச்சி

இ பிரிவில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்றது. முன்னாள் உலக சாம்பியனான பிரேசிலுக்கு முதல் ஆட்டத்திலேயே ஷாக் கிடைத்தது. சுவிட்சர்லாந்து 1-1 என டிரா செய்தது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என கோஸ்டாரிகாவை வென்றது. சுவிட்சர்லாந்து 2-1 என செர்பியாவை வென்றது.

நாக் அவுட் வாய்ப்பு

நாக் அவுட் வாய்ப்பு

இ பிரிவில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்று நடக்கும் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசிலும், கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் டிரா செய்தாலே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

நாக் அவுட் வாய்ப்பு

நாக் அவுட் வாய்ப்பு

இதுவரை 11 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள குட்டி நாடான சுவிட்சர்லாந்து, 1954ல் கடைசியாக கால் இறுதிக்கு முன்னேறியது. கோஸ்டாரிகாவுக்கு எதிரான ஆட்டத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் சுவிட்சர்லாந்து களமிறங்கியது.

அசால்டாக விளையாடியது

அசால்டாக விளையாடியது

முதல் ஆட்டத்தில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்த சுவிட்சர்லாந்து 31வது நிமிடத்தில் பிலனிம் செமய்லி கோலடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. 56வது நிமிடத்தில் கோஸ்டாரிகாவின் கென்டல் வாஸ்டன் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். அசால்டாக விளையாடிய சுவிட்சர்லாந்து அலர்ட் ஆறுமுகமாகி 88வது நிமிடத்தில் கோலடித்தது. ஜோசிப் டிர்மிக் கோலடித்தார். கடைசி நேரத்தில் சுவிட்சர்லாந்தின் சோம்னர் சேம் சைடு கோலடிக்க 2-2 என டிராவில் முடிந்தது. இதன் மூலம் சுவிட்சர்லாந்து நாக் அவுட் பிரிவுக்கு முன்னேறியது.

Story first published: Thursday, June 28, 2018, 1:33 [IST]
Other articles published on Jun 28, 2018
English summary
switzerland to meet costa rica in the group e match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+