Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணி இன்னும் முன்னேறனும்... கொஞ்சம் டைம் கொடுங்க... ஒடிசா கோச் வேண்டுகோள்

பனாஜி, கோவா : ஐஎஸ்எல் 2020-21 சீசன் நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய 25வது போட்டியில் கோவா அணியிடம் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் அணி சில விஷயங்களில் முன்னேற்றமடைய வேண்டும் என்றும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் ஒடிசா அணியின் கோச் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டி மூலம் வெற்றி பெற்றுள்ள கோவா அணி ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னற்றமடைந்துள்ளது.

கோவா அணி வெற்றி

கோவா அணி வெற்றி

ஐஎஸ்எல் 2020-21 சீசன் துவங்கி 25 போட்டிகளை தாண்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் எப்சி கோவா அணியுடன் மோதிய ஒடிசா எப்சி 1க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றி மூலம் கோவா அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கோச் பாக்ஸ்டர் கருத்து

கோச் பாக்ஸ்டர் கருத்து

ஆனால் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு புள்ளி மட்டுமே பெற்று 10வது இடத்தில் ஒடிசா அணி உள்ளது. இந்நிலையில் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒடிசா அணியின் கோச் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர், அணி சில விஷயங்களில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடினமான பயோ பபள்

கடினமான பயோ பபள்

நேற்றைய போட்டியில் வீரர்களை மட்டுமே குறைகூற முடியாது என்றும் நேரம் மற்றும் செயல்பாடு தோல்விக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணியில் இளம் வீரர்கள் அதிகமாக உள்ள நிலையில், பயோ பபள் சூழல் அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கால அவகாசம் தேவை

கால அவகாசம் தேவை

இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். இதேபோல அவர்களை சரியாக நிர்வகிக்க பயிற்சியாளர்களுக்கும் அவகாசம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். கடந்த போட்டி சரியாக திட்டமிடப்படவில்லை என்றும் அடுத்தடுத்த போட்டிகளில் சரியான திட்டமிடல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Story first published: Sunday, December 13, 2020, 13:39 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+