Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்னோட அணியோட ஆட்டமே இல்லை... சென்னையின் எப்சி அணியின் கோச் கவலை

பேம்போலிம் : பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 47வது போட்டியில் ஐதராபாத் அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியின் மிட் பீல்ட்டில் சென்னையின் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று அணியின் கோச் சிஸாபா லாஸ்லோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைய போட்டி தன்னுடைய சென்னையின் அணியின் போட்டி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐதராபாத் அணி வெற்றி

ஐதராபாத் அணி வெற்றி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் நேற்றைய 47வது போட்டி பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து அந்த அணி 12 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னையின் கோச் கவலை

சென்னையின் கோச் கவலை

சென்னையின் அணி இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்று 8வது இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனிடையே நேற்றைய போட்டி தங்களுடைய அணியின் உண்மையான போட்டி இல்லை என்று சென்னையின் எப்சி அணியின் கோச் சிஸாபா லாஸ்லோ கவலை தெரிவித்துள்ளார்.

கோச் குற்றச்சாட்டு

கோச் குற்றச்சாட்டு

அணி வீரர்கள் மிட்பீல்டில் எந்தவித முயற்சியும் இல்லாமல் விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐதராபாத் அணியின் ஜோயல் சியானிஸ் மற்றும் ஜோவா விக்டர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்த நிலையில், ஆரம்பம் முதலே ஐதராபாத் அணி வீரர்கள் சென்னையின் அணியை ஆதிக்கம் செய்தனர்.

கோல் கீப்பர் சூப்பர்

கோல் கீப்பர் சூப்பர்

இந்நிலையில், தன்னுடைய அணி வீரர்களின் ஆட்டம் குறித்து அதிருப்தி தெரிவித்த லாஸ்லோ, ஆயினும் கோல்கீப்பர் விஷால் கையித்தின் செயல்திறன் குறித்து பாராட்டு தெரிவித்தார். எதிரணியினரின் பல்வேறு முயற்சிகளை அவர் தடுத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் லாஸ்லோ. கடந்த சில போட்டிகள் மகிழ்ச்சி அளித்தாலும் இன்றைய போட்டி தங்களது அணியின் உண்மையான போட்டி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Tuesday, January 5, 2021, 17:22 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+