For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த முறை கோப்பையை கைப்பற்றாம விடமாட்டோம்... சென்னையின் எஃப்சி கோச் உறுதி

கோவா : இந்திய சூப்பர் லீக் 7வது சீசன் கோவாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய 11வது போட்டியில் சென்னையின் எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் சென்னையின் எஃப்சி அணி தனது 2வது வெற்றியை பெற முனைப்புடன் உள்ளது.

சென்னை -கேரளா அணிகள் மோதல்

சென்னை -கேரளா அணிகள் மோதல்

ஐஎஸ்எல் தொடரின் 7வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 11வது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் சென்னையின் எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன. தன்னுடைய இரண்டாவது வெற்றிக்கான தீவிரத்துடன் இந்த போட்டியில் சென்னையின் அணி மோத தயாராக உள்ளது.

சென்னையின் அணி முதல் வெற்றி

சென்னையின் அணி முதல் வெற்றி

சிசாபா லாஸ்லோ தலைமையிலான சென்னையின் எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியை இந்த தொடரில் பெற்றுள்ள நிலையில், தற்போது கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வெற்றிக் கொள்ள முனைப்புடன் உள்ளது.

2வது போட்டியில் தொடரும்

2வது போட்டியில் தொடரும்

சென்னையின் அணியின் அனிருத் தாப்பா மற்றும் இஸ்மாவின் அபார கோல்களால் கடந்த போட்டியில் சென்னையின் அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது, அதே வெற்றிக்கான தீவிரத்துடன் இன்றைய போட்டியில் சென்னையின் அணி எதிர்கொள்ளவுள்ளதாக அணியின் கோச் தெரிவித்துள்ளார்.

கோப்பை உறுதி -கோச்சை

கோப்பை உறுதி -கோச்சை

அந்த அணி இதுவரை இரண்டு கோப்பைகளை வெற்றி கொண்டுள்ள நிலையில், அதே தீவிரத்துடன் இந்த தொடரை எதிர்கொள்ள உள்ளதாகவும் கோச் சிசாபா லாஸ்வோ குறிப்பிட்டுள்ளார். மேலும் லாலியன்ஸுவாலா சாங்தேவிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

துவங்காத கேரளா அணி

துவங்காத கேரளா அணி

இதனிடையே இதுவரை தனது வெற்றிக் கணக்கை துவங்காத கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் இந்த போட்டியை தீவிரமாக எதர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்விடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 29, 2020, 16:34 [IST]
Other articles published on Nov 29, 2020
English summary
Two-time champions Chennaiyin FC will eye a second straight win
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+