Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாளைய போட்டியில எங்களது ஆட்டத்தை பாருங்க... எதிரணிக்கு சிம்ம சொப்பனமா இருப்போம்.. நஸ் உறுதி!

கோவா : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 37வது போட்டியில் நாளைய தினம் ஒடிசா எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன.

கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்துடன் இரண்டு அணிகளும் உள்ளன.

இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5ல் தோல்வியடைந்துள்ள ஒடிசா எப்சி அணி புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

நாளை 37வது போட்டி

நாளை 37வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 37வது போட்டி நாளை கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் இதில் ஒடிசா எப்சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய முதல் நேரடி வெற்றியை அடைய ஒடிசா எப்சி முனைப்புடன் உள்ளது.

இறுதி இடத்தில் ஒடிசா

இறுதி இடத்தில் ஒடிசா

தொடர்ந்து 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள ஒடிசா அணி, தொடரின் வலிமையான 4வது இடத்தில் உள்ள நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதவுள்ள நிலையில், இந்த போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நார்த்ஈஸ்ட் அணியின் பலமான வீரர்கள்

நார்த்ஈஸ்ட் அணியின் பலமான வீரர்கள்

அட்டாக் மற்றும் டிஃபென்ஸ் இரண்டிலும் ஒடிசா அணி வீரர்கள் தங்களை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனிடையே நார்த்ஈஸ்ட் அணியின் முக்கிய வீரர்களான இட்ரிசா சில்லா மற்றும் கிவேசி அப்பையா ஆகிய வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அந்த அணிக்கு உள்ளது.

ஒடிசா கோச் ஒப்புதல்

ஒடிசா கோச் ஒப்புதல்

இந்நிலையில் நார்த்ஈஸ்ட் அணியின் சில வீரர்கள் மிகவும் வேகமாக இருப்பதாக ஒடிசா அணியின் கோச் ஸ்டூவர்ட் பாக்ஸ்டர் தெரிவித்துள்ளார். அதனால் அவர்களை தனிப்பட்ட முறையில் இல்லாமல் குழுவாக இணைந்து தாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அணி வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றாக ஒத்துழைத்து செயல்பட்டால் மட்டுமே அவர்களை வீழ்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

இதனிடையே, அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை நார்த்ஈஸ்ட் அணியின் கோச் ஜெரார்ட் நஸ் வலியுறுத்தியுள்ளார். நாளைய போட்டியில் எதிரணியினருக்கு மிகப்பெரிய போட்டியாக தங்களது அணி வீரர்கள் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். நாளைய போட்டியில் வெற்றி நிச்சயம் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.

Story first published: Monday, December 21, 2020, 22:37 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+