For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஈஸ்ட் பெங்காலுடன் மோதும் மோஹுன் பகன் அணி... முதலிடத்தை தக்க வைக்க தீவிரம்!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 99வது போட்டி கோவாவின் படோர்டா மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் அணி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் இரண்டாவது முறையாக மோதவுள்ளன.

இரு அணிகளும் முறையே முதல் மற்றும் 9வது இடங்களில் உள்ள நிலையில் இந்த போட்டியின்மூலம் தனது முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள மோஹுன் பகன் அணி தீவிரமாக உள்ளது.

99வது போட்டி

99வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 99வது போட்டி கோவாவின் படோர்டா மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக காணப்படுகிறது.

வெற்றிகண்ட மோஹுன் பகன்

வெற்றிகண்ட மோஹுன் பகன்

ஏடிகே மோஹுன் பகன் அணி தொடரின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மும்பை சிட்டி எப்சியுடன் தொடர்ந்து முதலிடத்திற்கான போட்டி தொடர்ந்தது. ஆனால் தற்போது மும்பை சிட்டியை இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளிவிட்டு முதலிடத்தில் தொடர்கிறது ஏடிகே மோஹுன் பகன் அணி.

3 போட்டிகளில் மட்டும் தோல்வி

3 போட்டிகளில் மட்டும் தோல்வி

இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை கண்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து தன்னை நிரூபிக்க போராடிவரும் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி, தோல்வி, டிரா என சரிசமமாக இந்த தொடரில் சந்தித்து வருகிறது.கடந்த 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

முதலிடத்திற்கு தீவிரம்

முதலிடத்திற்கு தீவிரம்

கடந்த நவம்பர் மாதத்தில் இரு அணிகளும் மோதிய நிலையில் மோஹுன் பகன் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் அந்த வெற்றியை தொடர்ந்து தன்னை முதலிடத்தில் தொடர்ந்து தக்க வைக்க வேண்டிய கட்டாயம் மோஹுன் பகன் அணிக்கு உள்ளது. தற்போது எலிமினேஷன் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கண்டு களிக்கலாம்.

Story first published: Friday, February 19, 2021, 20:40 [IST]
Other articles published on Feb 19, 2021
English summary
In the previous clash in November, ATK Mohun Bagan secured a comfortable 2-0 victory
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X