For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

திடீர் விலகல்.. அடுத்து எந்த டீம்? விலகாத மெஸ்ஸி மர்மம்.. ரசிகர்கள் தவிப்பு!

மான்செஸ்டர் : கால்பந்து உலகையே தவிக்க வைத்துள்ளார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.

Recommended Video

Raina wants to promote Cricket in Jammu and Kashmir | OneIndia Tamil

கடந்த 17 ஆண்டுகளாக பார்சிலோனா அணியில் ஆடி வந்த அவர் திடீரென அந்த அணியை விட்டு விலகி உள்ளார்.

Will Lionel Messi join in Manchester City?

அடுத்து அவர் எந்த அணியில் இணையப் போகிறார்? என்ற மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இணைந்து பயிற்சி பெற்று, போட்டிகளில் ஆடி உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் கடந்த சில நாட்களாக பார்சிலோனா அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணி தோல்வி அடைந்து வெளியேறியது. அரை இறுதிக்கு கூட முன்னேறவில்லை. அதை அடுத்து மெஸ்ஸி அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இரு தினங்களுக்கு முன் தன்னை விடுவிக்குமாறு பார்சிலோனா அணி நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார் மெஸ்ஸி. அவர் அடுத்து எந்த அணிக்கு செல்ல இருக்கிறார்? என்பதே அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

பலரும் அடுத்து அவர் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு தான் செல்வார் என அடித்துக் கூறுகிறார்கள். அதற்கு காரணம், அந்த அணியின் பயிற்சியாளர் பெப் கார்டியாலோ. அவர் 2008 முதல் 2012 வரை பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக இருந்தவர்.

எங்களால முடியலை சாமி! சரண்டர் ஆன தென்னாப்பிரிக்கா.. 2ஆம் இன்னிங்க்ஸில் இந்தியா செய்த அந்த ட்ரிக்!எங்களால முடியலை சாமி! சரண்டர் ஆன தென்னாப்பிரிக்கா.. 2ஆம் இன்னிங்க்ஸில் இந்தியா செய்த அந்த ட்ரிக்!

பெப் கார்டியாலோவின் கீழ் ஆடிய போதுதான் மெஸ்ஸி உச்சத்துக்கு சென்றார். பார்சிலோனா அணியும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது. தற்போது மெஸ்ஸி அவர் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணிக்கே செல்வார் என்கிறார்கள்.

சிலர் அந்த அணியிடம் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு பணம் இருந்தாலும் அவருக்காக தங்கள் அணியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள் எனவும் கூறுகிறார்கள். மெஸ்ஸி ஆட்டத்திற்கு ஏற்ப பார்சிலோனா அணி மற்ற வீரர்களின் மாற்ற வலியுறுத்தும்.

ஆனால், மான்செஸ்டர் சிட்டி ,மற்றும் மான்செஸ்டர் யுனைட்டெட் போன்ற இங்கிலாந்து கிளப் அணிகளில் மெஸ்ஸிக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்ற கருத்தும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மெஸ்ஸி, இன்டர் மிலன் அல்லது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, August 28, 2020, 17:59 [IST]
Other articles published on Aug 28, 2020
English summary
Will Lionel Messi join in Manchester City? As Pep Guardiola is with Man. City, Messi may chose to stop there. But, some fans feel City won’t change their methods for Messi, like how Barcelona worked so far.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X