Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெல்லி சொன்னது கில்லி போல பலிச்சிடுச்சே... பிரான்சை வீழ்த்தியது ஜெர்மனி

ரியோடி ஜெனிரோ: நெல்லி யானை கணித்துச் சொன்னபடியே, ஜெர்மனி அணி, பிரான்ஸை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நான்காவது முறையாக அரையிறுதிக்கு சென்றுள்ள தங்கள் அணியின் சாதனையை ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

பலம் வாய்ந்த அணிகள்

பலம் வாய்ந்த அணிகள்

பிரேசிலியாவில் நேற்று நடைபெற்ற காலிறுதியில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பிரான்சும், ஜெர்மனியும் மோதிக்கொண்டன. பலம் வாய்ந்த இரு ஐரோப்பிய அணிகளும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

தலையால் வந்த கோல்

தலையால் வந்த கோல்

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்திலேயே ஜெர்மனியின், மேட்ஸ் ஹுமல்ஸ் ஒரு கோல் போட்டு அசத்தினார். மேலே பறந்து வந்த பந்தை தலையில் தட்டி பிரான்சு கீப்பரை ஏமாற்றி இந்த கோலை மேட்ஸ் போட்டார். இதன் பிறகு இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியும் முதல் பாதியில், வேறு கோல் விழவில்லை.

வீரர்கள் மோதல்

வீரர்கள் மோதல்

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மிகவும் பிரயத்தனப்பட்டதால் வீரர்கள் நடுவே மோதல் அதிகமானது. இதன் காரணமாக, சமி கேட்ரியா 54வது நிமிடத்திலும், பஸ்டியன் 80வது நிமிடத்திலும், மஞ்சள் அட்டை பெற்றனர்.

ஜெர்மனி தடுப்பு அபாரம்

ஜெர்மனி தடுப்பு அபாரம்

ஆட்ட நேர முடிவில் கூடுதலாக இரு நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கூடுதலாக கோல் போடமுடியவில்லை. ஜெர்மனியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருந்ததால் பிரான்ஸ் தோல்வியை தழுவியது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

4வது முறையாக அரையிறுதி

4வது முறையாக அரையிறுதி

அரையிறுதியில் ஜெர்மனி அணி பிரேசிலுடன் மோத உள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ஜெர்மனி அரையிறுதிக்குள் சென்று புதிய சாதனை படைத்துள்ளது. 2002, 2006, 2010, 2016 ஆகிய நான்கு உலக கோப்பைகளிலும் ஜெர்மனி அரையிறுதிக்குள் சென்றுள்ளது. இந்த நூற்றாண்டில் வேறு எந்த அணியும் இந்த சாதனையை செய்யவில்லை என்று இதை வர்ணிக்க முடியும்.

நெல்லி.. கில்லி..

நெல்லி.. கில்லி..

உலக கோப்பை போட்டிகளை சரியாக கணித்து சொன்ன நெல்லி யானை, நேற்றைய போட்டியில் ஜெர்மனி வெற்றி பெறும் என்றும் கணித்திருந்தது. இதனால் ஜெர்மனியை சேர்ந்த அந்த யானைக்கு தடபுடலாக அந்த நாட்டினர் விருந்து கொடுத்து கவனித்து வருகிறார்கள். கடந்த உலக கோப்பையில் பால் என்று பெயரிடப்பட்ட ஜெர்மனியின் ஆக்டோபஸ் சரியாக ரிசல்டுகளை கணித்தது நினைவிருக்கலாம்.

Story first published: Saturday, July 5, 2014, 12:55 [IST]
Other articles published on Jul 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+