உலகக் கோப்பை கால்பந்து - ஜெர்மனியை சந்திக்கிறது ஆஸ்திரேலியா

மற்ற இரு போட்டிகளில் அல்ஜீரியாவும், ஸ்லோவேனியாவும் ஒரு போட்டியி்ல் மோதுகின்றன. இன்னொரு போட்டியில், செர்பியாவும், காணாவும் மோதவுள்ளன.
அல்ஜீரியாவும், ஸ்லோவேனியாவும் கலந்து கொண்ட முதல் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. தற்போது 2வது பாதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்து செர்பியாவும், காணாவும் மோதும் போட்டி நடைபெறுகிறது. தர வரிசையில் 15வது இடத்தில் செர்பியாவும், 32வது இடத்தில் காணாவும் உள்ளன.
மூன்றாவது போட்டியில் ஜெர்மனியும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. டர்பனில் நடக்கும் இப்போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.
கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை தகுதி பெற்ற அணி ஆஸ்திரேலியா. இந்த முறை மேலும் ஒரு படி முன்னேறும் வகையில் ஆடும் என கருதப்படுகிறது.
அதேசமயம், 3 முறை உலக சாம்பியன் ஆன அணி ஜெர்மனி. கடந்த முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் போனதால் ஏமாற்றத்தில் உள்ள ஜெர்மனி இந்த முறை இறுதிப் போட்டியைக் குறி வைத்து தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆட காத்திருக்கிறது.
எனவே இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியாவை ஜெர்மனி சத்தாய்க்குமா அல்லது சமாளிக்குமா என்பது இன்று நள்ளிரவுக்கு மேல் தெரியும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications