Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை ஹாக்கி.. பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்த ஜெர்மனி.. ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியனானது

பெல்பியஸ்: 2026 ஹாக்கி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையை அதிக முறை (4 முறை) வென்ற பாகிஸ்தானின் உலக சாதனையை ஜெர்மனி சமன் செய்துள்ளது.

பெல்ஜியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பெல்பியஸ் ஹாக்கி மைதானத்தில் சுமார் 8,000 ரசிகர்கள் முன்னிலையில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணிகளின் தடுப்பாட்டமும் மிக வலுவாக இருந்ததால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

Hockey World Cup Fianl Germany Beats Spain to Win 4th Men s Hockey World Cup Equals Pakistan s Record

இதன் பின்னர் ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்ட்ரத்ஆஃப் அதிரடியாக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். இந்த கோல் ஆட்டத்தின் தலைவிதியை மாற்றியது. பதிலடி கொடுக்க முயன்ற ஸ்பெயின் அணிக்கு 45-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஸ்பெயின் கேப்டன் மார்க் மிராலெஸ் அடித்த பந்தை ஜெர்மனியின் தற்காப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஆட்டத்தின் கடைசி 4 நிமிடங்களில் ஸ்பெயின் பயிற்சியாளர் மேக்ஸ் கால்டாஸ், கோல்கீப்பர் லூயிஸ் கால்சாடோவை வெளியேற்றிவிட்டு கூடுதல் அட்டாக்கர் ஒருவரை களம் இறக்கினார். ஆனால், ஜெர்மனி அணியின் வலுவான தடுப்பாட்டத்தை ஸ்பெயின் வீரர்களால் உடைக்க முடியவில்லை. இறுதிவரை ஜெர்மனி தனது 1-0 என்ற முன்னிலையைத் தக்கவைத்து வெற்றியை உறுதி செய்தது.

உலகக் கோப்பை ஹாக்கி பைனலில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா பெண்கள் அணி கோப்பை வென்றது

உலகக் கோப்பை ஹாக்கி பைனலில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா பெண்கள் அணி கோப்பை வென்றது

ஜெர்மனி அணி இதற்கு முன்பு 2002, 2006 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி 1971, 1978, 1982 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாகிஸ்தானின் அதிக உலகக்கோப்பை வென்ற சாதனையை ஜெர்மனி சமன் செய்தது. 1998-க்குப் பிறகு முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணிக்கு இந்தத் தோல்வி ஏமாற்றமாக அமைந்தது.

Story first published: Monday, August 31, 2026, 8:20 [IST]
Other articles published on Aug 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+