Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அயர்லாந்திடம் பணிந்தது இந்தியா... காலிறுதி வாய்ப்பு சிக்கலானது!

லண்டன்: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் மூலம் காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பை சிக்கலாக்கி கொண்டது.

16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

india bowed down to ireland in the women hockey world cup

முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை இந்தியா சந்தித்தது. அந்த ஆட்டம் 1-1 என டிராவானது. இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா சந்தித்தது. இந்த ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் அன்னா ஓபிளானகான் அடித்த கோலால் நெதர்லாந்து 1-0 என வென்றது.

முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற அயர்லாந்து, இரண்டு வெற்றிகள் மூலம், கால் இறுதிக்கு முதல் அணியாக நுழைந்தது.

4 பிரிவுகளில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக நுழையும். ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடிக்கும் அணிகள், பிரிவுகளுக்குள் நடக்கும் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

பி பிரிவில் இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் உள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோல் வித்தியாசத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. அடுத்து 29ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் அமெரிக்காவை இந்தியா சந்திக்கிறது.

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. 7 முறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சரியான முறையில் அந்த வாய்ப்புகளை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Story first published: Friday, July 27, 2018, 12:37 [IST]
Other articles published on Jul 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+