பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அயர்லாந்தை சந்திக்கிறது இந்தியா!
லண்டன்:பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை எதிர்நோக்கி, அயர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது இந்தியா.
16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத இந்தியா இந்த முறை மிகவும் வலுவான அணியுடன் களமிறங்கியுள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை இந்தியா சந்தித்தது. அந்த ஆட்டம் 1-1 என டிராவானது.
இந்த நிலையில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை சந்திக்கிறது இந்தியா. அயர்லாந்து தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் வென்றால், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அயர்லாந்துக்கு அதிகம் உள்ளது. அதே நேரத்தில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினோம். அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அயர்லாந்து அணியை வெற்றி கொள்வோம் என்று கேப்டன் ராணி ராம்பால் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications