For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விராட் கோஹ்லியை மிஞ்சினார்.. ஹாக்கி வீரர் சர்தார் சிங் சூப்பரப்பு!

யோ - யோ உடல்தகுதி தேர்வில் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியை மிஞ்சினார் ஹாக்கி வீரர் சர்தார் சிங்.

Recommended Video

விராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்- வீடியோ

டெல்லி: உங்ககிட்ட வேகம் இல்லை என்று இனி இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கை கூற முடியாது. யோ யோ தகுதியில், கிரிக்கெட் கேப்டன் கோஹ்லியை பின்னுக்கு தள்ளியதுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார் சிங்.

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் தங்கத்தை தக்க வைக்கும் முனைப்போடு இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியா புறப்பட்டுள்ளது.

sardar singh better than kohli in yo-yo test

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான 32 வயதாகும் சர்தார் சிங் இந்தப் போட்டிக்கான பயிற்சியின்போது யோ யோ உடல்தகுதி தேர்வில் ஈடுபட்டார்.

உங்களுக்கு வேகம் போதவில்லை என்று முன்னாள் கோச் ஜோயர்ட் மரிஞ்னேவால் ஓரங்கட்டப்பட்டவர் சர்தார் சிங். கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

அந்த வேகத்தில், தனது வேகத்தை அதிகரிக்கும் பயிற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் சர்தார் சிங். சமீபத்தில் நடத்ப்பட்ட யோ யோ உடல்தகுதி தேர்வில் 21.4 புள்ளிகள் எடுத்தார் சர்தார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையான 21.3 புள்ளிகளை அவர் முறியடித்தார்.

கிரிக்கெட் வீரர்களுக்கான தகுதி 16.1 புள்ளிகளாகும். கேப்டன் விராட் கோஹ்லி 19 புள்ளிகள் எடுத்துள்ளார். மீண்டும் ஒருமுறை கோஹ்லியை யோ யோ தகுதித் தேர்வில் வென்றுள்ளார் சர்தார்.

Story first published: Thursday, August 16, 2018, 11:19 [IST]
Other articles published on Aug 16, 2018
English summary
hockey player sardar singh beats kohli in yo-yo test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+