Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : தனி ஆளாக வாரிக் குவித்த பர்தீப்.. மிரண்டு தோற்ற பெங்கால் அணி!

நொய்டா : பாட்னா பைரேட்ஸ் அணியின் பர்தீப் நார்வால் விஸ்வரூபம் எடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணியை துவம்சம் செய்தார்.

2019 புரோ கபடி லீக் தொடரில் நடந்த 124வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின, இந்தப் போட்டியில் பாட்னா அணியின் பர்தீப் நார்வால் 36 புள்ளிகளை அள்ளி தனி ஆளாக கலக்கினார்.

Pro Kabaddi League 2019 : Bengal Warriors vs Patna Pirates 124th match result

பாட்னா அணி 69 - 41 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் ரெய்டு புள்ளிகளை குவித்ததால் இந்தப் போட்டி பெரும் சுவாரசியமான போட்டியாக அமைந்தது.

தடுப்பாட்டம் தான் இந்தப் போட்டியின் முக்கிய வித்தியாசமாக அமைந்தது. பாட்னா பைரேட்ஸ் அணி 17 டேக்கில் புள்ளிகள் பெற்ற நிலையில், பெங்கால் அணியால் 7 டேக்கில் புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. பாட்னா அணி இந்தப் போட்டியில் எடுத்த 41 ரெய்டு புள்ளிகளில் 36 புள்ளிகள் பர்தீப் மட்டுமே எடுத்தவை.'

Pro Kabaddi League 2019 : Bengal Warriors vs Patna Pirates 124th match result

முதல் பாதியில் பாட்னா அணி 27 - 17 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. ஆட்ட நேர இறுதியில் 69 - 41 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பிளே - ஆஃப் முன்னேறி விட்ட பெங்கால் அணி தங்கள் அடுத்தகட்ட வீரர்களை தயார் செய்ய இந்தப் போட்டியில் முன்னணி வீரர்களை ஆடவைக்கவில்லை. அதே சமயம், பாட்னா அணி பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பை தவற விட்டாலும் பெருமைக்காக ஆடியது.

Story first published: Monday, October 7, 2019, 19:05 [IST]
Other articles published on Oct 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+