Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : தனி ஒருவனாக ஹரியானா கதையை முடித்த பவன்.. பிளே-ஆஃப் செல்லும் பெங்களூரு!

பெங்களூரு : பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் செஹ்ராவத் ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில், ஹரியானா அணியை துவைத்து எடுத்து இன்னும் பல சாதனைகளை தன் வசம் ஆக்கி உள்ளார்.

2019 புரோ கபடி லீக் தொடரின் 118வது போட்டியில் பெங்களூரு புல்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

Pro Kabaddi League 2019 : Bengaluru Bulls vs Haryana Steelers 118th match result

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 59 - 36 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பவன் செஹ்ராவத் தனி ஆளாக தன் அணியின் ஒட்டுமொத்த ரெய்டு புள்ளிகளையும் தானே எடுத்து புதிய சாதனை புரிந்தார்.

மேலும், 39 ரெய்டு புள்ளிகள் அள்ளிய அவர் புரோ கபடி லீக் தொடரில் புதிய வரலாறு படைத்தார். பாட்னா அணியின் பர்தீப் நார்வால் முன்பு ஒரே போட்டியில் 34 புள்ளிகள் எடுத்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் பவன்.

ஹரியானா அணியின் விகாஷ் கொண்டோலா 17 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். அதுவும் சிறந்த ஆட்டம் தான் என்றாலும், பவன் செஹ்ராவத் முன்னிலையில் அது பயனில்லாத ஆட்டமாக மாறியது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி முதல் பாதியில் 28 - 18 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அந்த அணி ஆட்ட நேர முடிவில் 59 - 36 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ஐந்தாவது அணியாக பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது.

Story first published: Thursday, October 3, 2019, 12:45 [IST]
Other articles published on Oct 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+