For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : சாதனை படைத்த நவீன் குமார்.. பாட்னா பைரேட்ஸ் போராட்டம் வீண்.. டெல்லி சூப்பர் வெற்றி!

டெல்லி : டெல்லி அணிக்கு மீண்டும் ஒரு முறை நவீன் குமார் அசத்தலான வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.

பாட்னா பைரேட்ஸ் அணியை மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டபாங் டெல்லி அணி.

Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs Patna Pirates 66th match result

நவீன் குமார் புரோ கபடி வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து 9 போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகளை எடுத்து சாதனை படைத்தார் நவீன் குமார்.

டெல்லி அணி தன் சொந்த மண்ணில் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது.

முதல் நான்கு நிமிடங்களுக்குள் பாட்னா அணியை ஆல் அவுட் செய்தது டெல்லி. நவீன் குமார் புயல் போல ரெய்டு புள்ளிகளை அள்ளி வந்தார்.

Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs Patna Pirates 66th match result

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்லி அணி 12வது நிமிடத்தில் மீண்டும் ஒரு ஆல் அவுட் செய்தது. அப்போது டெல்லி அணி 18 - 7 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தது.

அதன் பின், பாட்னா அணி தன் போராட்டத்தை துவக்கியது. முதல் பாதி முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் போது அந்த அணி டெல்லியை ஆல் -அவுட் செய்தது. முதல் பாதியின் முடிவில் 26 - 17 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது டபாங் டெல்லி.

இரண்டாம் பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணியின் பார்தீப் நார்வால் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினார். முதல் சில நிமிடங்களில் 9 புள்ளிகளை எடுத்தார். டெல்லி அணியை இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒரு முறை ஆல் அவுட் செய்ய காரணமாக இருந்தார். எனினும், போட்டி முடிவில் டபாங் டெல்லி அணி 38 - 35 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, August 31, 2019, 16:33 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs Patna Pirates 66th match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+