For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : கேப்டன் அசத்தல் ஆட்டம்.. ஜெய்ப்பூர் அணியை அடித்து வீழ்த்தியது பாட்னா!

கொல்கத்தா : பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நார்வால் அசத்தல் ஆட்டத்தில் அந்த அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

அதிரடி ரெய்டர் பர்தீப் நார்வால் இந்தப் போட்டியில் 14 ரெய்டு புள்ளிகள் அள்ளினார். ஜாங் குன் லீ 8 ரெய்டு புள்ளிகள் எடுத்து அணிக்கு உதவினார்.

Pro Kabaddi League 2019 : Jaipur Pink Panthers vs Patna Pirates 86th league match result

பிங்க் பாந்தர்ஸ் அணி கடைசி நிமிடத்தில் ஆட்டம் காட்டினாலும் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முன்னேறி ஒன்பதாம் இடத்தை பிடித்தது. அதன் மூலம், பிளே ஆஃப் செல்லும் போட்டியில் தன்னையும் இணைத்துக் கொண்டது அந்த அணி.

முதல் பாதியின் முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 15 - 14 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. இறுதி நிமிடங்களில் இரு அணிகளும் மாற்றி, மாற்றி புள்ளிகளை பெற்று, சரிக்கு சமமாக மோதி வந்தன.

எனினும், பர்தீப் நார்வால் மற்றும் ஜாங் குன் லீ கடைசி நேர ரெய்டுகளில் தங்கள் அணியை காப்பாற்றினர். பாட்னா பைரேட்ஸ் அணி 36 - 33 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.

Story first published: Friday, September 13, 2019, 12:46 [IST]
Other articles published on Sep 13, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Jaipur Pink Panthers vs Patna Pirates 86th league match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+