Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : கடைசி 5 நிமிஷம்.. எல்லாமே தலைகீழா மாறிப் போச்சே.. பாட்னாவை வீழ்த்திய டெல்லி!

ஜெய்ப்பூர் : டபாங் டெல்லி அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி அணியின் நவீன் குமார் மற்றும் விஜய் 10 புள்ளிகளுக்கும் மேல் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

Pro Kabaddi League 2019 : Patna Pirates vs Dabang Delhi 108th match result

பாட்னா பைரேட்ஸ் அணியின் பர்தீப் நார்வால் எப்போதும் போல தன் அதிரடி ரெய்டுகளால் 19 புள்ளிகளை அள்ளினார். அந்த அணி இரண்டு முறை டெல்லி அணியை ஆல் - அவுட் செய்து இருந்தது. எனினும், கடைசி மூன்று நிமிடங்களில் போட்டியை தலைகீழாக மாற்றிய டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சரி சமமாக இருந்தன. இரண்டு அணிகளுமே தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தின. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 13 - 13 என்ற புள்ளிக் கணக்கில் இருந்தது. இரண்டு அணிகளுமே ஆல் - அவுட் ஆகவில்லை.

Pro Kabaddi League 2019 : Patna Pirates vs Dabang Delhi 108th match result

இரண்டாம் பாதியில் பாட்னா அணியின் பர்தீப் அதிரடி ஆட்டம் ஆடினார். டெல்லி அணியை இரண்டு முறை ஆல் - அவுட் செய்தது பாட்னா பைரேட்ஸ். கடைசி மூன்று நிமிடங்கள் வரை பாட்னா அணி முன்னிலையில் இருந்தது.

Pro Kabaddi League 2019 : Patna Pirates vs Dabang Delhi 108th match result

அப்போது டெல்லி அணி புள்ளிகளை வாரி எடுக்கத் துவங்கியது. பாட்னா அணியை இந்தப் போட்டியில் முதன் முதலாக ஆல் - அவுட் செய்தது. ஆட்ட நேர இறுதியில் நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்று பெற்றி பெற்றது டெல்லி.

ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 43 - 39 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

Story first published: Friday, September 27, 2019, 18:06 [IST]
Other articles published on Sep 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+