Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : எல்லோருமே சூப்பர்.. யுபி யுத்தா அணி அதிரடி வெற்றி.. எதிர்த்து போராடிய அந்த எதிரணி வீரர்!

பெங்களூரு : புரோ கபடி லீக் போட்டியில் யுபி யுத்தா அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

2019 புரோ கபடி லீக்கின் ஒரு பகுதி போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் 76வது லீக் போட்டியில் யுபி யுத்தா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

Pro Kabaddi League 2019 : Patna Pirates vs UP Yoddha 76th match result

யுபி யுத்தா அணி ரெய்டு, டேக்கில் என் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது. பாட்னா பைரேட்ஸ் அணியில் ரெய்டர் பர்தீப் நார்வால் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரை மட்டுமே நம்பி இருந்தது பாட்னா. அதுவே தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த போட்டி துவங்கிய ஏழாவது நிமிடத்திலேயே பாட்னா அணியை ஆல் அவுட் செய்தது யுபி. எனினும், அதில் இருந்து மீண்டு வந்தது பாட்னா. முதல் பாதி முடிவில் 16 - 14 என இரண்டு புள்ளிகள் பின் தங்கி இருந்தது அந்த அணி.

இரண்டாம் பாதியில் வேகம் எடுத்த பாட்னா, முதல் நிமிடத்திலேயே யுபி அணியை ஆல் அவுட் செய்தது. பர்தீப் நார்வால் அதிரடி ரெய்டுகளால் யுபி அணியை திணற வைத்தார். எனினும், பாட்னாவின் தடுப்பாட்டத்தில் இருந்த பலவீனத்தால் யுபி அணி மீண்டு வந்தது.

கடைசி மூன்று நிமிடங்கள் இருக்கும் போது பாட்னா அணியை மீண்டும் ஆல் அவுட் செய்தது யுபி யுத்தா. போட்டி முடிவில் யு யுத்தா 41 - 29 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

யுபி யுத்தா அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ் 10 ரெய்டு புள்ளிகளும், சுரேந்தர் கில் 7 ரெய்டு புள்ளிகளும், நிதேஷ் குமார் 5 டேக்கில் புள்ளிகளும் எடுத்தனர். பாட்னா அணியின் பர்தீப் நார்வால் 14 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

Story first published: Saturday, September 7, 2019, 15:22 [IST]
Other articles published on Sep 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+