For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்!

புனே : புனேரி பல்தான் அணியின் பங்கஜ் மோஹிதே அசத்தல் ரெய்டுகள் செய்ய, அந்த அணி 42 - 38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் புனேரி பல்தான் அணி தடுப்பாட்டம், ரெய்டு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது. பெங்களூரு புல்ஸ் அணி ரெய்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது.

Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Bengaluru Bulls 99th league match result

புனேரி அணியை விட 11 ரெய்டு புள்ளிகள் அதிகம் எடுத்தது பெங்களூரு. எனினும், தடுப்பாட்டம் சுமாராக இருந்ததை அடுத்து, 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் புனேரி அணி 20 - 15 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் மற்றும் ரோஹித் குமார் ரெய்டுகளில் ஆதிக்கம் செலுத்தினர்.

Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Bengaluru Bulls 99th league match result

எனினும், புனேரி அணி சமாளித்து 42 - 38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. புனேரி அணியின் பங்கஜ் மோஹிதே 17 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். அந்த அணியின் சுர்ஜீத் சிங், சாகர் கிருஷ்ணா தடுப்பாட்டத்தில் 5 டேக்கில் புள்ளிகளுக்கும் மேல் எடுத்தனர்.

இந்தப் போட்டியுடன் புனே பிரிவு லீக் போட்டிகள் நிறைவு அடைந்தன. அடுத்த கட்டப் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

Story first published: Saturday, September 21, 2019, 22:10 [IST]
Other articles published on Sep 21, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Bengaluru Bulls 99th league match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+