For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கா..தமிழ் தலைவாஸ்-னு ஒரு டீம் அடி வாங்குறதுக்குன்னே சிக்கியிருக்கு.. ஆட்டோ பிடிச்சு வந்து சேருங்க

கொல்கத்தா : 2019 புரோ கபடி லீக் போட்டியில் நடந்த 83வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை துவைத்து எடுத்து இருக்கிறது பாட்னா பைரேட்ஸ்.

புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் இருக்கும் பாட்னா பைரேட்ஸ் அணியிடம் மோசமாக தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ். இதற்கு முன்பு ஆடிய லீக் போட்டியில் டபாங் டெல்லி அணியிடமும் மோசமாக தோல்வி அடைந்தது.

Pro Kabaddi League 2019 : Tamil Thalaivas vs Patna Pirates 83rd match result

டெல்லி அணி, தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் பலவீனமாக இருப்பதை அறிந்து ரெய்டுகளில் வேகாத கூட்டி 50 - 34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, இந்த சீசனில் முதல் முறையாக 50 புள்ளிகளை தொட்ட அணி என்ற பெருமையை பெற்றது.

அதே தமிழ் தலைவாஸ் அணியை வைத்து பாட்னா பைரேட்ஸ் 51 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அந்த அளவிற்கு தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் கேலிக் கூத்தாகி இருக்கிறது.

பாட்னா பைரேட்ஸ் அணியின் ரெய்டர் பர்தீப் நார்வால் தமிழ் தலைவாஸ் அணியை புரட்டி எடுத்து 26 புள்ளிகள் குவித்தார். அதோடு, இந்த புரோ கபடி வரலாற்றில் 1000 புள்ளிகளை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் செய்தார்.

தமிழ் தலைவாஸ் அணியின் அஜித் குமார் ரெய்டு 10 புள்ளிகள் பெற்றது மட்டுமே அந்த அணிக்கு சாதகமான ஒரே விஷயம். இந்தப் போட்டியின் முதல் பாதி சற்றே இயல்பாக சென்றது. பாட்னா அணி 18 - 13 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் வெளுத்து வாங்கிய பர்தீப், ரெய்டு புள்ளிகளை குவித்தார். மொத்தமாக நான்கு முறை ஆல் அவுட் செய்யப்பட தமிழ் தலைவாஸ் அணி 25 - 51 என்ற புள்ளிக் கணக்கில் மோசமான தோல்வியை தழுவியது.

வரிசையாக இரண்டு போட்டிகளில் எதிரணியை 50 புள்ளிகள் வரை எடுக்க விட்டு வேடிக்கை பார்த்துள்ளது அந்த அணி. முன்னதாக நடந்த யுபி யுத்தா - குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் போட்டியில் யுபி அணி 33 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, September 11, 2019, 13:41 [IST]
Other articles published on Sep 11, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Tamil Thalaivas vs Patna Pirates 83rd match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+