For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : கடைசி நிமிடம்.. பம்மிப் பதுங்கி ஆடி போட்டியை டை செய்த இரு அணிகள்!

புனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிய போட்டி டையில் முடிந்தது.

இரு அணிகளும் கடைசி நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு போட்டியை டை செய்தன. இந்தப் போட்டியிலும் பாட்னா பைரேட்ஸ் அணியின் பர்தீப் நார்வால் அதிரடி காட்டினார்.

Pro Kabaddi League 2019 : Telugu Titans vs Patna Pirates 98th league match result

17 ரெய்டு புள்ளிகள் அள்ளிய அவர், தனி ஆளாக தன் அணியை காப்பாற்றினார். மறுபுறம் தெலுகு டைட்டன்ஸ் அணியில், சித்தார்த் தேசாய், ரஜினிஷ் 10க்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகள் பெற்றனர். இருந்தும் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

இந்தப் போட்டியில் முதல் பாதியிலும் இரு அணிகளும் சரிசமமாக போட்டியிட்டு போட்டியை டை செய்து இருந்தன. முதல் பாதி முடிவில் 19 - 19 என புள்ளிகள் எடுத்து இருந்தன தெலுகு, பாட்னா அணிகள்.

Pro Kabaddi League 2019 : Telugu Titans vs Patna Pirates 98th league match result

கடைசி இரு நிமிடங்கள் இருக்கும் போது பாட்னா அணி, செய்த ஆல் - அவுட்டால் அந்த அணி ஒரு புள்ளி வித்தியாசத்துக்கு போட்டியை எடுத்துச் சென்றது. அதன் பின் இரு அணிகளும் தடுப்பாட்டத்தில் குதித்தன. அதன் விளைவாக, போட்டி டையில் முடிந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 42 - 42 என புள்ளிகள் எடுத்து இருந்தன.

Story first published: Saturday, September 21, 2019, 21:44 [IST]
Other articles published on Sep 21, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Telugu Titans vs Patna Pirates 98th league match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+