Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : ஹே.. நாங்க பிளே - ஆஃப் போறோம்! முக்கிய வீரரை மடக்கி.. வெற்றியை பறித்த யு மும்பா!

பெங்களூரு : யு மும்பா அணி அசத்தலாக ஆடி பாட்னா பைரேட்ஸ் அணியை 30 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் 117வது போட்டி யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

Pro Kabaddi League 2019 : U Mumba vs Patna Pirates 117th match result

பாட்னா அணியின் பர்தீப் நார்வாலை தடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழலில் யு மும்பா அணியின் கேப்டன் பாசெல் அட்ரச்சலி சிறப்பாக செயல்பட்டு, தன் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் பிளே - ஆஃப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்தது யு மும்பா அணி. முதல் பாதி முதலே அந்த அணி பிளே - ஆஃப்பை மனதில் வைத்து ஆடியது.

முதல் பாதியில் யு மும்பா அணி ஒன்பதாவது நிமிடத்தில் பாட்னா அணியை ஆல் - அவுட் செய்தது. பாட்னா அணியும் போராடியது. முதல் பாதியின் முடிவில் யு மும்பா 17 - 13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் மீண்டும் ஒரு முறை பாட்னாவை ஆல் - அவுட் செய்தது யு மும்பா. பாட்னாவின் பர்தீப் நார்வால் அதிக நேரம் அவுட் ஆகி களத்துக்கு வெளியே அமர வைக்கப்பட்டார்.

ஆட்ட நேர இறுதியில் யு மும்பா அணி 30 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தன் பிளே - ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

Story first published: Thursday, October 3, 2019, 12:17 [IST]
Other articles published on Oct 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+