Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி புள்ளிப்பட்டியல் - தமிழ் தலைவாஸ் அடிச்ச அடி.. எல்லா டீமும் காலி.. நம்பர் 1 இடம்

ஹைதராபாத்: 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்த தமிழ் தலைவாஸ் அணி, இந்த முறை ஐந்து போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து கலக்கி வருகிறது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி, அதில் மூன்று வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு டை செய்து உள்ளது தமிழ் தலைவாஸ் அணி. இதன் மூலம் 19 புள்ளிகள் பெற்று, 37 ஸ்கோர் வித்தியாசத்துடன் முதல் இடத்தில் உள்ளது. புனேரி பல்தான் அணி 19 புள்ளிகளுடன், 34 ஸ்கோர் வித்தியாசத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

pro kabaddi pro kabaddi 2024 pkl 2024 2024

புனேரி பல்தான் சிறந்த அணியாக இருக்கும் நிலையில் அந்த அணியை முந்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் இடத்தை பிடித்து இருக்கிறது, இதன் மூலம் இந்த ஆண்டு நிச்சயம் புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி முன்னேறும் என்ற நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.

கடைசி நொடியில் ஜெய்ப்பூர் அணிக்கு ஆப்பு.. மாஸ் சம்பவம் செய்த தமிழ் தலைவாஸ்.. யாருக்கு வெற்றி?

இந்த முறை தமிழ் தலைவாஸ் அணி ரெய்டுகளில் மட்டுமில்லாமல், தடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகிறது. தோல்வி அடைந்த ஒரு போட்டியிலும் கூட 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தான் தோற்றது. அதுவே அந்த அணி முதல் இடத்தை பிடிக்க முக்கிய காரணமாகவும் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி அடுத்து நவம்பர் 4 ஆம் தேதி பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இனி வரும் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிகளை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2024 புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் (நவம்பர் 1 முடிவில்) -

1 - தமிழ் தலைவாஸ் - 19 புள்ளிகள் - 37 ஸ்கோர் வித்தியாசம்

2 - புனேரி பல்தான் - 19 புள்ளிகள் - 34 ஸ்கோர் வித்தியாசம்

3 - உபி யுத்தாஸ் - 17 புள்ளிகள் - 27 ஸ்கோர் வித்தியாசம்

4 - ஹரியானா ஸ்டீலர்ஸ் - 15 புள்ளிகள் - 11 ஸ்கோர் வித்தியாசம்

5 - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 14 புள்ளிகள் - 21 ஸ்கோர் வித்தியாசம்

6 - யு மும்பா - 13 புள்ளிகள் - 0 ஸ்கோர் வித்தியாசம்

7 - டபாங் டெல்லி - 13 புள்ளிகள் - (-15) ஸ்கோர் வித்தியாசம்

8 - பெங்கால் வாரியர்ஸ் - 12 புள்ளிகள் - (-2) ஸ்கோர் வித்தியாசம்

9 - பாட்னா பைரேட்ஸ் - 11 புள்ளிகள் - (-1) ஸ்கோர் வித்தியாசம்

10 - தெலுகு டைட்டன்ஸ் - 11 புள்ளிகள் - (-39) ஸ்கோர் வித்தியாசம்

11 - குஜராத் டைட்டன்ஸ் - 7 புள்ளிகள் - (-27) ஸ்கோர் வித்தியாசம்

12 - பெங்களூரு புல்ஸ் - 6 புள்ளிகள் - (-46) ஸ்கோர் வித்தியாசம்

Story first published: Saturday, November 2, 2024, 9:39 [IST]
Other articles published on Nov 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+