Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'பிக்ஸி்ங்'கில் சிக்கி.. திருமணத்தில் 'மிக்ஸ்' ஆன பிரபலங்கள்!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். உண்மைதான்.. ஆண்கள் முரட்டுக் குதிரை போல என்றால், அவர்களை வழி நடத்தி, நெறிப்படுத்தி, திசையை சரியாகக் காட்டி, சரியான போக்கில் நடைபோட விட்டு, தானும் கூடவே நடந்து அந்த ஆணின் ஒவ்வொரு வெற்றியையும் பார்த்து, அனுபவித்து அவனையும் சந்தோஷப்படுத்தி,பெருமிதம் கொள்ள வைத்து, தானும் அதில் சந்தோஷம் அடையும் பெருந்தன்மையான குணம் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

தாய்மை என்பது குழந்தைப் பேறு மட்டுமல்ல, தன் கணவன், தன் சகோதரன், தன் தந்தை என்று ஒவ்வொரு ஆணையும் தாய்மை உணர்வுடன் கவனித்துப் பரிவு காட்டுவதால்தான் பெண்கள், ஆண்களை விட உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக,நிதானம் மிக்கவர்களாக உள்ளனர்.

விளையாட்டுத்துறையில் பெண்களின் பங்கு, அதிலும் வீரரர்களின் மனைவியரின் பங்கு மகத்தானது, அளப்பறிய தியாக மனப்பான்மையுடன் கூடியது. சச்சினாகட்டும், டோணியாகட்டும்.. அல்லது வேறு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த புகழ் பெற்ற வீரர்களாகட்டும், அவர்களது மனைவியரோ அல்லது அன்னையரோதான் அவர்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்களாக இருப்பார்கள்.

2013ம் ஆண்டு பல வீரர்கள், திருமணப் பந்தத்தில் கால் எடுத்து வைத்துள்ளனர். அதில் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த சில புதுமணத் தம்பதிகளைப் பார்ப்போமா...

ராஜகுமாரியைக் கைப்பிடித்த ஸ்ரீசாந்த்

ராஜகுமாரியைக் கைப்பிடித்த ஸ்ரீசாந்த்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி கைதாகி, கலங்கிப்போய், கடைசியில் விளையாடுவதிலிருந்தே நிரந்தரமாக தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இந்த ஆண்டில் திருமணக் கோலம் பூண்டார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி தேவியை அவர் கரம் பிடித்தார்.

காதலியை கரம் பிடித்த பையூஷ் சாவ்லா

காதலியை கரம் பிடித்த பையூஷ் சாவ்லா

இந்திய சுழற்பந்து வீச்சாளர் பையூஷ் சாவ்லா, தான் நீண்ட நாளாக காதலித்து வந்த அனுபூதி செளகானை ஜூலை மாதம் மொராதாபாத்தில் வைத்து மணம் முடித்தார்.

மாடல் அழகியை மணம் முடித்த பாலாஜி

மாடல் அழகியை மணம் முடித்த பாலாஜி

சென்னையில் நடந்த எளிய திருமண விழாவில் தனது காதலியும், மாடல் அழகியுமான பிரியா தலுக்கரை மணந்தார் எல்.பாலாஜி.

மறுமணம் புரிந்த வாசிம் அக்ரம்

மறுமணம் புரிந்த வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், 2013, ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மறுமணம் புரிந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெனீரா தாம்ப்சனை அவர் எளிய திருமணத்தில் கரம் பிடித்தார்.

சுஷ்மிதாவை கைப்பிடித்த திவாரி

சுஷ்மிதாவை கைப்பிடித்த திவாரி

காயம் காரணமாக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவித்து வரும் மனோஜ் திவாரி, தனது தோழி சுஷ்மிதாவை 2013, ஜூலை 18ம் தேதி கைப்பிடித்தார்.

இலங்கையில் ஒரு கிரிக்கெட் திருமணம்

இலங்கையில் ஒரு கிரிக்கெட் திருமணம்

இலங்கை கிரிக்கெட் கேப்டன் ஏஞ்சலோ மாத்யூஸ், 2013, ஜூலை 18ம் தேதி கொழும்பில் நடந்த திருமணத்தில் ஹேஷனியை மணந்தார்.

பிக்ஸிங்கில் சிக்கிய கையோடு ஒரு வெட்டிங்

பிக்ஸிங்கில் சிக்கிய கையோடு ஒரு வெட்டிங்

ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங்கில் சிக்கிக் கைதானவர் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவான். இவர் ஜாமீனில் வெளியே வந்து தனது காதலி நேஹா சம்ப்ரியை மணந்தார்.

புஜாராவை மணந்த பூஜா

புஜாராவை மணந்த பூஜா

இந்தியாவின் நடுக்கள வீரரான சட்டேஸ்வர் புஜாரா, 2013, பிப்ரவரி 13ம் தேதி நடந்த திருமணத்தில் பூஜா பபாரியை மணம் முடித்தார்.

Story first published: Wednesday, December 18, 2013, 15:17 [IST]
Other articles published on Dec 18, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+