Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக தரவரிசை.. பாட்மின்டனில் கலக்கும் இந்தியாவின் பஞ்ச பாண்டவர்கள்!

டெல்லி: பாட்மின்டன் விளையாட்டில் உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களில் முதல் முறையாக, 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாட்மின்டன் விளையாட்டின் உலக தரவரிசையில், இதற்கு முன் இந்திய வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தாலும், முதல் முறையாக, முதல் 20 இடங்களுக்குள், 5 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கிடாம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து 8வது இடத்தில் உள்ளார். எச்.எஸ். பிரனாய், 19வது இடத்தில் இருந்து, 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சாய் பிரனீத், தொடர்ந்து, 17வது இடத்தில் உள்ளார்.

 5 Indians in BWF rating

சமீர் வர்மா, 21வது இடத்தில் இருந்து, 19 வது இடத்துக்கு முன்னேறினார். அஜய் ஜெயராம், 20வது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து, 2வது இடத்திலும், சாய்னா நெஹ்வால், 12வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி 23வது இடத்தில் உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரனவ் ஜெர்ரி சோப்ரா, சிக்கி ரெட்டி 19வது இடத்தில் இருந்து, 17வது இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.

Story first published: Saturday, September 30, 2017, 18:36 [IST]
Other articles published on Sep 30, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+