Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த வருஷமா... ஒலிம்பிக்கா... சாத்தியமே இல்லை... கருத்துக்கணிப்பில் 77% பேர் கருத்து

டோக்கியோ : கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோவில் இந்த மாதம் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தொடருக்கென ஏராளமான கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த போட்டிகளை எடுத்து நடத்துவது சாத்தியப்படாது என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து கடந்த வாரத்தில் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 77 சதவிகிதத்தினர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டிற்கு ஒலிம்பிக் ஒத்திவைப்பு

அடுத்த ஆண்டிற்கு ஒலிம்பிக் ஒத்திவைப்பு

இந்த மாதத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்த நிலையில், ஜப்பான் பிரதமர் மற்றும் ஒலிம்பிக் சங்க தலைவர் இருவரும் இணைந்து தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டு, இந்த தொடரை அடுத்த ஆண்டிற்கு அதாவது ஜூலை 2021ற்கு ஒத்திவைத்தனர்.

மீண்டும் நடத்துவது சவாலானது

மீண்டும் நடத்துவது சவாலானது

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளுக்காக முன்னேற்பாடுகளை மேற்கொண்ட சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அதற்கென ஏராளமான கோடி ரூபாய்களை செலவழித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொடரை மீண்டும் நடத்துவது சவாலானது என்றும் கூறப்பட்டுள்ளது.

77% கருத்து

77% கருத்து

இதனிடையே, இந்த தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் நியூஸ் நெட்வொர்க் ஏராளமான மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் 77 சதவிகிதத்தினர், கண்டிப்பாக தொடர் நடக்காது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை.

17% கருத்து

17% கருத்து

ஏற்கனவே இந்த தொடரை எளிமையாக்கி நடத்த நிர்வாகிகள் முடிவெடுத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இந்த தொடர் கண்டிப்பாக நடத்தப்படும் என்று 17 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் தகுதிச்சுற்றில் பங்கேற்றும் ஏற்காமலும் பல ஆயிரம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், இந்த போட்டிகளுக்காக காத்திருக்கும் சூழலில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Story first published: Monday, July 6, 2020, 23:51 [IST]
Other articles published on Jul 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+