புதிதாக 2 ஐபிஎல் அணிகள்-வாங்க விரும்பும் அபுதாபி ஷேக்!

மிகப் பெரிய பணத் திமிங்கலமாக இந்திய கிரிக்கெட் மாறி விட்டது. தொட்டதற்கெல்லாம் பணம் என்ற நிலைக்கு கிரிக்கெட்டைக் கொண்டு போய் விட்டார்கள்.
குறிப்பாக ஐபிஎல் வந்தது முதல் பெரும் பணக்காரர்கள் ஆடும் இடமாக மாறி விட்டது இந்திய கிரிக்கெட் களம்.
இந்த நிலையில், ஐபிஎல்லில் மேலும் 2 புதிய அணிகளை சேர்க்கவுள்ளதாம் ஐபிஎல் நிர்வாகம். இந்த இரண்டு அணிகளையும் வாங்க கடும் போட்டி எழுந்துள்ளதாம்.
அதில் முக்கியமான நபர் அபுதாபியைச் சேர்ந்த பெரும் பணக்காரரான ஷேக் மன்சூர். இவர் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து கிளப்பின் உரிமையாளர் ஆவார்.
அதேபோல செல்சியா, ஆர்சனல், லிவர்பூல் ஆகிய கால்பந்து அணிகளின் உரிமையாளர்களும் கூட புதிய அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு அணியின் ஆரம்ப கட்ட ஏலத் தொகையாக 225 பில்லியன் டாலரை நிர்ணயித்துள்ளது ஐபிஎல்.
மேற்கண்ட கால்பந்து அணிகள் தவிர ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முஞ்சால், சஹாரா குழுமத்தின் சுப்ரதோ ராய், பூனாவாலா குழுமம், பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், சஞ்சய்தத், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகியோரும் கூட வாங்க ஆர்வமாக உள்ளனராம்.
இவர்களில் சஞ்சய் தத் சூட்டோடு சூடாக லலித் மோடியைப் பார்த்துப் பேசி விட்டு் வந்திருக்கிறார்.
மேலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளரான மெரிலியோன் கிரிக்கெட் கிளப்பும் கூட ஒரு அணியை வாங்க ஆர்வமாக உள்ளதாம்.
இவர்கள் தவிர சரத் பவாரின் நிழலும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், அடானி குழுமத்த லைவர் கெளதம் அடானி ஆகியோரும் கூட ஆர்வமாக உள்ளனராம்.
புதிதாக வரவுள்ள அணிகள் லக்னோ, கான்பூர், அகமதாபாத், கொச்சி, தர்மசாலா ஆகியவற்றில் ஏதாவது இரண்டின் பெயரைத் தாங்கியிருக்கும் என்கிறார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications