ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் வெண்கலம்…மனிகா பத்ரா, சரத் கமல் இணை வென்றது
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியா முதல் பதக்கத்தை டேபிள் டென்னிஸில் வென்றுள்ளது. இன்று நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய இணை சீன இணையிடம் தோல்வி அடைந்து, வெண்கலத்தை வென்றது.
இந்தியா சார்பாக கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா மற்றும் சரத் கமல் பங்கேற்றனர். சீனாவுக்கு எதிராக அரையிறுதியில் ஆடிய இந்திய வீரர்கள் நான்கு செட்களை இழந்து ஒரு செட் மட்டுமே வென்றது. இதனை அடுத்து சீனா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஏற்கனவே, டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது. தொடர்ந்து இந்த ஆசிய விளையாட்டில் இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
நேற்று பத்தாம் நாள் போட்டிகள் முடிவில் இந்தியா 50 பதக்கங்கள் மட்டுமே வென்று இருந்தது. இன்று முதல் பதக்கமாக டேபிள் டென்னிஸ் வெண்கலம் அமைந்தது. அடுத்து தடகள போட்டிகள் நடைபெற உள்ளதால், இன்று மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications